ஜென் Z - ஃப்ரீயா விடு மானே!

மேகி

ரிமை எடுத்துக்கிறது வேறு; எல்லை மீறுவது வேறு. காதலில் இதுதான் பெரிய பிரச்னை. பையன்கள் என்னதான் ஓப்பன்னெஸ் உலகநாதன்களாக இருந்தாலும், காதலிகளுக்கு எதுவுமே பத்தாது. `பாவப்பட்ட பையன்களுக்கும் ஒரு தனி உலகம் இருக்கும். அவங்களுக்கும் ஒரு லைஃப் ஸ்டைல் இருக்கும்’னு நினைக் காமல், காதலிக்கிறேன்கிற பேர்ல காதலிகள் காய்ச்சியெடுப்பாங்க.

எல்லாருக்கும் ‘பெர்சனல் ஸ்பேஸ்’னு ஒண்ணு இருக்கு. இதை மட்டும் இல்ல... வேறு சில விஷயங்களையும் பசங்க விட்டுக்கொடுக்க மாட்டாங்க. அதுல கை வைக்காமல் கடந்துபோனா காதல் கசாட்டாவா இனிக்கும்; இல்லாட்டி கம்பி நீட்டும்.  அப்படிப்பட்ட கேர்லெஸ் கேர்ள்ஸுக்களுக்காக ஒரு  சேஃப்ட்டி கைடு.

 மகிழ்ச்சியாக இருக்கவிடணும்

லட்ச ரூபாய்க்கு நீங்க கிஃப்ட் வாங்கிட்டுப் போறீங்க. தோனி கடைசி பாலில் சிக்ஸர் அடிச்சு ஜெயிக்கவைப்பாரானு அவன் பதறிட்டுப் மேட்ச் பார்க்கிறப்ப கிஃப்ட்டை நீட்டிட்டு, ‘நீ கண்டுக்கவே இல்ல... கவனிக்கவே இல்ல’னு சண்டை போட்டீங்கனா... ஸாரி தோழீஸ். அவனுக்குச் சில சின்னச் சின்ன விஷயங்களில் மகிழ்ச்சி ஒளிஞ்சுட்டிருக்கும். அது... ஒரு நாய்க்குட்டி ஓடுறதா இருக்கலாம். இல்ல... நயன்தாரா சிரிக்கிறதாக்கூட இருக்கலாம். அவனை எல்லாம் அப்டியே விட்றணும் தெரியுமா?

 நிதிச் சுதந்திரம்

அவனுக்கான பொருளாதாரச் சுதந்திரத்தை நீங்க கொடுத்தே ஆகணும். ‘யாருக்கு எவ்ளோ கொடுத்த, அவனுக்கு ஏன் செலவு பண்ற, வினோத்துக்கு எதுக்கு கிஃப்ட் வாங்கிட்டு?’னு அவன் செலவுபண்ற விஷயங்கள்ல கைவெச்சா, வோல்டேஜ் ஜாஸ்தி ஆகி ஷாக் அடிக்க வாய்ப்புகள் அதிகம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்