ஜென் Z - மந்திரக்கை!

க்ருஷ்

தோனி, ஷேவாக் என்றாலுமே நமக்குப் பிடிச்ச ஐ.பி.எல் டீமுக்கு எதிரா ரன் அடிச்சா, ஆங்கிரிபேர்டா மாறிடுவோம். ஆனால், டிவில்லியர்ஸ் மட்டும் விதிவிலக்கு. `இந்திய அணியில், வெளிநாட்டு வீரர் ஒருவர் மட்டும் விளையாட அனுமதிக்கப்படும்' என ஐசிசி அறிவித்தால், இந்தியர்களின் ஏகோபித்த ஓகோபித்த ஆதரவு ஏபி டிவில்லியர்ஸுக்குத்தான் கிடைக்கும்!

`இந்தியர்கள் ஒவ்வொரு முறையும் `ஏபிடி...’ எனக் கூச்சலிடும்போதும் கடவுளுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாக நினைக்கிறேன்’ என, தன் சுயசரிதைப் புத்தகமான `AB The Autobiography’-ல் குறிப்பிடுகிறார் டிவில்லியர்ஸ். 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐ.பி.எல் போட்டிகளில் டிவில்லியர்ஸ் டெல்லி அணிக்கு விளையாடியிருந்தாலும், ஒன்பது கிரகங்களும் உச்சம்பெற்று சிக்ஸர் மழை தருவித்தது எல்லாம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காகத்தான். அந்த அணிக்காக ஆடிய ஒரு போட்டியில்தான் இந்திய ரசிகர்கள் அவரை `ஏபிடி’ என அழைத்து உற்சாகப்படுத்தினர்.

ஆதர்ச நாயகன் ஜான்டி ரோட்ஸை முன்னுரை எழுதவைத்திருக்கிறார் டிவில்லியர்ஸ். `நீ ஆட்டத்தின் போக்கை மாற்றிக்கொண்டு வருகிறாய். பல ஆண்டுகளுக்கு முன்னர் என்னை அப்படித்தான் சொன்னார்கள்.

நீ கிரிக்கெட்டை புதிய நிலைகளுக்கு எடுத்துச்செல்வாய்’ என விவியன் ரிச்சர்ட்ஸ் பாராட்டியதைப் பெருமையோடு எழுதியிருக்கிறார் டிவில்லியர்ஸ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்