இன்பாக்ஸ்

* `கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக ஒரே எடையில் இருக்கும் நடிகை!' என ட்ரெண்ட் ஆகியிருக்கிறார் த்ரிஷா. அவருடைய உடல் எடை, 55 கிலோவுக்கு மேல் ஒரு கிலோகூட இதுவரை கூடவில்லையாம். தமிழ் சினிமாவின் ஹெவி வெயிட் கதாநாயகிகள் லிஸ்ட்டில், 62 கிலோ எடையுடன் முதல் இடத்தில் இருப்பவர் அனுஷ்கா. ஒல்லி கில்லி!

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மகனுமான நிகில், கன்னட சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.`கர்நாடகாவில் நம்ம கட்சிக்கு செல்வாக்கு குறைந்துவருகிறது. நம்ம ஆள் சினிமாவில் நடித்தால்தான் கட்சியை மீண்டும் மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க முடியும்' என்ற ஆலோசனைகளின் பேரில் தேவகவுடாவின் ஆசீர்வாதத்தில் நிகில் ஹீரோவாகி இருக்கிறார். ஃபார்முலா பழசு!

மகன் - தம்பி பாசத்துக்கு இடையே சிக்கித் தவிக்கிறார் முலாயம் சிங். உத்தரப்பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், தன்னுடைய சித்தப்பா சிவ்பால் யாதவின் ஆட்களை கட்சியில் இருந்து தூக்கியடிக்க, சிவ்பால் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதற்கிடையே சமாஜ்வாதி கட்சித் தலைவர் பதவியில் இருந்து மகன் அகிலேஷைத் தூக்கிவிட்டு, தம்பி சிவ்பால் யாதவைத் தலைவராக அறிவித்தார் முலாயம். இந்தக் குடும்ப மோதலுக்குக் காரணம் அமர்சிங்தான் எனச் சொல்லப்பட, `தேர்தல் நேரத்தில் இந்த சூப்பர் சண்டை!' என எதிர்க்கட்சிகள் உற்சாகத்தில் இருக்கின்றன. குடும்ப அரசியல்

58,000 கோடி ரூபாய்க்கு, 36 ரஃபேல் போர் விமானங்களை பிரான்ஸிடம் இருந்து வாங்கியிருக்கிறது இந்தியா. மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்திலேயே டீல் பேசப்பட்டு சர்ச்சைக்குள்ளான இந்த ஒப்பந்தத்தை, விலை குறைத்துப் பேசி முடித்திருக்கிறார் மோடி. மணிக்கு 2,000 கிலோ மீட்டர் வேகம் வரை பறக்கும் இந்த விமானத்தைக் கண்டறிவதும் தாக்குவதும் சிரமம் என்பதுதான் இதன் சிறப்பு. டீல் இப்போது முடிந்துவிட்டாலும் முதல் விமானத்தின் டெலிவரியே இன்னும் மூன்று ஆண்டுகள் கழித்துதான். மோடீல்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்