உணவு நல்லது வேண்டும்!

காய்கறி அவல் பிரட்டல்

தேவையானவை: சிவப்பு அரிசி அவல், துருவிய கேரட், மஞ்சள் பூசணி துருவல் - தலா 100 கிராம், மாங்காய்த் துருவல், நெல்லிக்காய்த் துருவல் - தலா 50 கிராம், கொத்தமல்லி - ஒரு கைப்பிடி, மிளகுத்தூள் - சிறிதளவு, இஞ்சி - சிறு துண்டு.

செய்முறை: சிவப்பு அவலைத் தண்ணீரில் சுத்தப்படுத்தி, சிறிது உப்பு சேர்த்து ஈரத்துடன் 10 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். இதனுடன், துருவிவைத்துள்ள கேரட், மாங்காய், பூசணி, நெல்லிக்காய் துருவல்களைச் சேர்த்து நன்கு கிளறவும். கடைசியில் அரைத்த இஞ்சியுடன் கொத்தமல்லி, மிளகு, உப்பு சேர்த்துக் கிளறவும்.

பலன்கள்: கேரட், நெல்லிக்காய், பூசணியில் வைட்டமின் ஏ, சி மற்றும் தாதுஉப்புக்கள் நிறைந்துள்ளன. தேவையற்றக் கொழுப்பு குறையும். இதை காலை உணவாகவும் மதிய உணவாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்