செவிலியர்களின் உலகம்!

கே.புவனேஸ்வரி, படம்: தி.விஜய்

``என் பெயர் கோமதி. எம்.ஆர்.பி (Medical Recruitment Board) தேர்வில் தேர்ச்சிபெற்று,  ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராகப் பணியில் சேர்ந்தேன். 7,700 ரூபாய் சம்பளம் வாங்குகிறேன். நிரந்தர ஊழியர்களுக்கு முன்னால் அடிமை நான். அவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதைத்தான் செய்ய வேண்டும். பெரும்பாலான நேரங்களில் மருத்துவர்கள், லேப் டெக்னீஷியன்கள் என எவருமே இருக்க மாட்டார்கள். மருந்துகள்கூட ஸ்டாக் இருக்காது. அவசர நேரத்தில், `மருந்துகள் இல்லை. அரசுப் பொது மருத்துவமனைக்குத்தான் செல்ல வேண்டும்' எனச் சொன்னால், கிராம மக்கள் புரிந்துகொள்ளாமல் சண்டைபோடுவார்கள். கோபத்தில் அடிக்கவும் வருவார்கள். ஆபாச வார்த்தைகளால் திட்டுவார்கள். பல நேரங்களில் வாட்ச்மேன்கூட மருத்துவமனையில் இருக்க மாட்டார். ஆனாலும், 24 மணி நேரப் பணி என்பதால், இரவிலும் நாங்கள் பணி செய்துதான் ஆகவேண்டும். ஆண்கள் குடித்துவிட்டு வந்து ஆபாசமான வார்த்தைகளில் பேசுவார்கள். அதை எல்லாம் சகித்துக்கொண்டுதான் செவிலியர் வேலை பார்க்கிறோம். அடுத்தவரின் வலிக்கு மருந்து தடவியும், வேதனைக்கு ஆறுதல் சொல்லியும் சேவை செய்யும் எங்களது பிரச்னைகளுக்கும் மனக்காயங்களுக்கும் மருந்திட யாருமே இல்லை'' என்று கண்ணீருடன் பேசுகிறார் கோமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

செவிலியர்கள் அனைவரும், நல்ல சம்பளத்தில் வேலை பார்க்கிறார்கள்; நோயாளிகளைக் கவனிக்காமல் அரட்டையடிப்பார்கள்; படித்து முடித்ததும் வெளிநாடுகளுக்குப் பறந்துவிடுவார்கள்' என்ற பொதுப்பார்வைதான் செவிலியர்கள் மீது இருக்கிறது. உண்மையில் அவர்களது உலகம் எப்படிப்பட்டது? அவர்களுக்கும் மருத்துவர் களுக்குமான உறவு எப்படி இருக்கிறது? நர்ஸுகளுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கிறதா?

 கடுமையான ஆள் பாற்றாக்குறை

இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி, 22 லட்சம் நர்ஸுகள் இருக்க வேண்டும். ஆனால், இங்கு இருப்பதோ 12 லட்சம் நர்ஸுகள். அதாவது 1,000 நோயாளிகளுக்கு இரண்டு நர்ஸுக்கும் குறைவாகவே இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வருகிறது. குறைந்த சம்பளத்தால் நர்ஸ் வேலையைவிட்டு வெளியேறுவது, அதிக சம்பளத்துக்காக வெளிநாடுகளுக்குச் செல்வதும்தான் காரணம். உலகிலேயே அதிக அளவில் வெளிநாடுகளுக்கு செவிலியர்களை வேலைக்கு அனுப்பும் பட்டியலில், இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்