“டீ, சமோசா 9 கோடி ரூபாய்க்குச் சாப்பிட முடியுமா?”

நா.சிபிச்சக்கரவர்த்தி, படம்: சொ.பாலசுப்ரமணியன்

``வில்லங்கமான கேள்விகள் எதுவும் இல்லாம, சுலபமா இருந்தா ஓ.கே. ஆனா, என்னை வெச்சு ரொம்பக் கலாய்ச்சுடக் கூடாது, சரியா தம்பி?'' - இது நடிகை வினோதினி.

``தாராளமாக் கேளுங்க. தெரிஞ்ச பதிலைச் சொல்றேன். தெரியலைன்னாலும், `மானே... தேனே..!' போட்டு ஜாலியா சமாளிச்சுடுவேன்'' எனச் சிரிக்கிறார் எழுத்தாளர் சரவணன் சந்திரன்.

``யாரும் என்னை `மக்கு பொண்ணு'னு நினைச்சுடாம, நம்ம கெத்து காலியாகாத மாதிரியான கேள்விகள்னா டபுள் ஓ.கே ப்ரோ!'' என ஆர்வமாகிறார் நடிகை ரம்யா பாண்டியன்.

``ஷூட்டிங்ல செம பிஸி சார். பேப்பர் படிச்சே சில வாரங்கள் ஆச்சு. நான் சொதப்பிட்டேன்னா, சரியான பதில் சொன்ன மாதிரி மேக்கப் பண்ணிடுங்க'' என ஜாலி விண்ணப்பம் வைக்கிறார் டான்ஸ் மாஸ்டர் ஷோபி.

`` `பிரேமம்' தெலுங்கு ரீ-மேக்கில் மலர் டீச்சர் யார்?''

பதில்: ஸ்ருதிஹாசன்

வினோதினி: ``ஹா... ஹா... நான்கூட கொஞ்சம் பதற்றமாகிட்டேன். பதில் ரொம்ப ஈஸி. நான் மலையாள `பிரேமம்' படத்தையே இன்னும் பார்க்கலை. ஆனா, ஸ்ருதிஹாசனுக்காக தெலுங்கு `பிரேமம்' படத்தை நிச்சயம் பார்த்துடுவேன்.''

சரவணன் சந்திரன்: ``இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் தெரியலைன்னா, `தமிழ்நாட்டுல இருப்பதே வேஸ்ட்!'னு சொல்லிடுவாங்க. ஸ்ருதிஹாசன். ஆனா, இங்கேதாங்க எனக்கு ஒரு சின்ன டவுட். காலேஜ்ல வேலை செய்யுறவங்களை `புரொஃபசர்'னுதானே சொல்வாங்க. ஆனா, இங்கே ஏன் `டீச்சர்'னு சொல்றாங்க? மலர் டீச்சர் என்ன எல்.கே.ஜி பசங்களுக்கா வகுப்பு எடுத்தாங்க?'' நல்ல கேள்வி. ஆனா, பதில் தெரியலையேஜி!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்