அறுவைசிகிச்சையா... அமைதியா?

மருதன், ஓவியம்: ஹாசிப்கான்

த்தியாவசியம் என்ற நிலையில் முடிந்த அளவுக்குக் குறைவான சேதத்தை ஏற்படுத்தி, தீமையளிக்கும் பகுதியை வெட்டி எடுப்பதே அறுவைசிகிச்சை. உரி தாக்குதலைத் தொடர்ந்து, கடந்த வியாழன் அன்று எல்லைக்கோடுப் பகுதியையொட்டி மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கையை ‘சர்ஜிக்கல் தாக்குதல்’ என்று அழைக்கிறது இந்தியா.

‘காஷ்மீர் எல்லைக் கோட்டுக்கு அருகில் உள்ள பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக எங்களுக்கு துல்லியமான உளவுத் தகவல்கள் கிடைத்தன. இந்தப் பயங்கரவாதிகள் ஜம்மு-காஷ்மீரிலும் வேறு சில பகுதிகளிலும் ஊடுருவி தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர். எனவே, அவர்களை முறியடிக்கும் நோக்கத்துடன் இந்திய ராணுவம் சர்ஜிக்கல் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பயங்கரவாதிகளும் அவர்களை ஆதரிப்பவர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்’ என்கிறது இந்தியா. ராணுவ கமாண்டோக்களைக் கொண்டு ஏழு இடங்களில் வெற்றிகரமாக அதிவேக தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகச் சொல்கிறது இந்தியா.

இந்தியத் தரப்பு விளக்கத்தை மட்டும் அல்ல, அந்த விளக்கத்தில் தொனிக்கும் வெற்றிச் செய்தியையும் பாகிஸ்தான் மறுத்திருக்கிறது. ‘பயங்கரவாத முகாம்களின் மீது அல்ல, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில்தான் இந்தியா அத்துமீறி தாக்குதல் நடத்தியிருக்கிறது. குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் எல்லாம் இல்லை, இரண்டு பேர் மட்டுமே எங்கள் தரப்பில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதுபோக, எங்கள் நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்த ஓர் இந்திய வீரர் பிடிபட்டிருக்கிறார். மற்றபடி, அமைதியான உறவை நாடுவதே எங்கள் கொள்கை. இதை, பலவீனம் எனக் கருதிவிட வேண்டாம். எங்கள் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால்,  அதை முறியடிப்பதற்கான ஆற்றல் எங்களிடம் இருக்கிறது' என்கிறது பாகிஸ்தான்.

உண்மையில் நடப்பது என்ன? இந்தத் தாக்குதலை, நம்முடைய ராணுவ வெற்றியாகவோ அல்லது மோடியின்  அரசியல் வெற்றியாகவோ பார்க்க முடியுமா? நீண்டகால நோக்கில் இதன் விளைவுகள் என்னவாக இருக்கும்?

உள்நாட்டு ஆதரவும் உலக ஆதரவும்

இந்தியாவின் சர்ஜிக்கல் தாக்குதலுக்கு, எதிர்பார்த்தபடியே பொதுமக்களின் ஆதரவு கிடைத்திருக்கிறது. பல இடங்களில் பட்டாசு வெடிக்கப்பட்டிருக்கிறது. இணையம் முழுக்க ஆரவாரமான வரவேற்புக் குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. உதாரணத்துக்கு ஒன்று. ‘ஜாக்கிரதை, மோடி நினைத்தால் பாகிஸ்தான் என்றொரு தேசத்தையே உலக வரைபடத்தில் இருந்து அழித்துவிட முடியும். இந்தத் தாக்குதல் ஓர் ஆரம்பம் மட்டுமே!’ என சமூக வலைதளங்களில் வாழ்த்தி மகிழ்ந்திருக்கிறார்கள்.

அரசியல் கட்சிகளும் வேறுபாடுகள் இன்றி தாக்குதலை ஆதரித்திருக்கின்றன. `பா.ஜ.க-வின் கவனமான திட்டமிடல்தான் அதற்குக் காரணம்' என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். உரி தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்பு தொடர்பான கேபினட் கமிட்டி கூட்டப்பட்டிருக்கிறது. மன்மோகன் சிங்கிடம் தகவல்களை மோடி பகிர்ந்துகொண்டிருக்கிறார். பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத் ஆகிய நான்கு மாநிலங்களிலும் எச்சரிக்கையுடன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. சர்வதேச எல்லைக்கோட்டுக்கு 10 கிலோ மீட்டர் அருகில் வசித்த பஞ்சாப் மக்கள் அப்புறப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். குஜராத் மீனவர்கள், எல்லையையொட்டிய கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்  என  எச்சரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்