கமான் கபடி!

பு.விவேக் ஆனந்த்

ந்தியாவில் கிரிக்கெட், கால்பந்துக்கு அடுத்தபடியாக இப்போது விறுவிறு வளர்ச்சியில் இருப்பது கபடிதான். அக்டோபர் 7-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை சர்வதேச உலகக் கோப்பை கபடிப் போட்டி அஹமதாபாத்தில் நடக்கவிருக்கிறது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் மல்லுக்கட்டப் போகும் இந்தப் போட்டியில் `தாதா' இந்தியாதான்.எனவே, இந்தியாவுக்கு பலமான போட்டியை ஏற்படுத்த பல அணிகளும் பலவிதமான பயிற்சிகளில் களம் இறங்க இருக்கின்றன. கோப்பை யாருக்கு?!

கெத்து இந்தியா!

`உலகக் கோப்பையை ஜெயிக்க ஆசையா...இந்தியாவை ஜெயிக்க ஆசையா?' இப்படி ஒரு கேள்வியை, கபடி விளையாடும் அணிகளிடம் வைத்தால், `இந்தியாவை ஜெயிக்க வேண்டும்' என்பதுதான் பெரும்பாலான அணிகளின் பதிலாக இருக்கும். ``இந்தியாவை ஜெயித்தால், உலகக் கோப்பையை ஜெயித்ததற்கு சமம். இந்திய அணியை வெற்றிகொள்வதுதான் இந்த உலகக் கோப்பையில் எங்கள் இலக்கு” எனச் சொல்லியிருக்கிறார் அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் ரிக்கார்டோ.

`பஞ்சாபி ஸ்டைல் கபடி' எனச் சொல்லப்படும் சர்க்கிள் ஃபார்மெட்டில் இந்தியா எப்போதுமே கெத்து. ஆனால், இந்த உலகக் கோப்பை சர்க்கிள் ஃபார்மெட்டுக்குப் பதிலாக, இன்டர்நேஷனல் ஃபார்மெட்டில், விளையாடப்படுகிறது. இந்திய வீரர்கள் பலரும் `ப்ரோ கபடி' என்ற லீக் தொடரில் விளையாடியவர்கள் என்பதால், இந்த ஃபார்மெட்டும் இந்தியாவுக்கு ஈஸிதான். ராகுல் செளத்ரி, சந்தீப் நர்வால் இருவரும் கபடி உலகக் கோப்பையில் இந்தியாவின் சூப்பர் ஸ்டார்ஸ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்