ஜென் Z - நான் ஜெகதீசன் ஆனது எப்படி?

சிபி

``கிரிக்கெட் எனக்கு ரத்தத்துலேயே ஊறினது ப்ரோ. சும்மா கெத்து காட்டணும்னு சொல்லலை. உண்மையாவே..!'' என நம்பிக்கை வார்த்தைகளோடு பேசத் தொடங்குகிறார் ஜெகதீசன். சமீபத்தில் நடந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் அதிரடி மன்னன் இவர்தான். 8 மேட்சுகளில் 397 ரன்கள் குவித்து, எதிர் அணி பெளலர்களை ஓடவிட்டவர் ஜெகதீசன்

``அப்பா சி.ஜெ.நாராயணன், கிரிக்கெட் ப்ளேயர். அந்தக் காலத்தில் டாடா குரூப் டீமில் இருந்தார். மூணாவது படிக்கும்போது என்னை கோயம்புத்தூரில் உள்ள கிரவுண்டுக்குக் கூட்டிட்டுபோனாங்க. அப்பா பந்து வீச, நான் அந்தப் பந்தை செம பவரோடு பேட்டால் தூக்கி அடிச்சிருக்கேன். அதுதான் என்னோட ஃபர்ஸ்ட் ஷாட். அப்புறம் அப்பாவும் நானும் நேரம் கிடைக்கும்போது எல்லாம் கிரவுண்டுக்குப் போய் விளையாடுவோம். எப்படி பெளலிங் போடுறது? பெளலிங் போடும்போது கையை எப்படி வெச்சுக்கணும்? கீப்பிங் எப்படிப் பண்றது? பேட்டை எப்படிப் பிடிக்கிறதுனு எல்லாத்தையும் கத்துக்கிட்டேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்