ஜென் Z - ப்ரியாவின் சக்தி!

இரா.கலைச்செல்வன்

“எங்க அப்பா, அம்மா ரெண்டு பேருமே ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் என்னைப் படிக்கவெச்சாங்க.அவங்களை பத்திரமா, சந்தோஷமாப் பார்த்துக்கணும். அதுக்காகத்தான், காலேஜ் முடிச்ச மூணே மாசத்துல அலைஞ்சு, திரிஞ்சு வேலையில் சேர்ந்தேன். இப்பதான் என் வாழ்க்கை ரொம்ப நல்லா போயிட்டிருக்கு. அதுக்குள்ள... அவன்... அந்த மிருகம் என்னை இப்படிப் பண்ணிடுச்சே!

வரணும் சார்... நான் திரும்பவும் வந்து வேலைக்குப் போய், நல்லா சம்பாதிச்சு, எங்க அப்பா-அம்மாவை நல்லா பார்த்துக்கணும்” - 2013-ம் ஆண்டு ஆசிட் வீச்சுக்கு ஆளாகி, தன் உயிரை இழந்த காரைக்கால் வினோதினி, கடைசியாகப் பேசிய சொற்கள் இவை.

நம்முடைய தோல், வெளிப்பகுதி, நடுப்பகுதி, உட்பகுதி என மூன்று அடுக்குகளைக் கொண்டுள்ளது. அதன் மீது ஆசிட் வீசும்போது... அது வெளிப்பகுதியை உருக்கி, நடுப்பகுதியில் பலமாக இருக்கும் கொழுப்புகளையும் எரித்து, உட்பகுதியை ஊடுருவி உறுப்புகளைக் கிழித்து, கடைசியில் எலும்புகளையே அரித்துவிடுகிறது. ஆசிட் வீச்சில் பாதிக்கப்படுபவர் களின் வலியை நிச்சயம் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. ஆசிட்  வீச்சில் இருந்து மீண்டவர்களின் ஒரே தேவை, நம்பிக்கை. அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் ஒரு `சூப்பர் ஹீரோ' கதையை உருவாக்கியிருக்கிறார் அமெரிக்க - இந்தியத் திரைப்பட இயக்குநர் ராம் தேவினேனி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்