ஜென் Z - ஊட்டிக்கு தனியாத்தான் போகணும்!

கருப்பு

பொண்ணுங்களைப் பார்க்கவைக்கிறதே ஜென் X-க்குப் பெரிய விஷயம். பார்க்கவைத்துவிட்டு நம்பர் வாங்க முடியாமத் தவித்தது ஜென் Y காலம். இப்ப நம்பரையும் வாங்கிட்டு சொதப்புறாங்க ஜென் Z பசங்க. அப்படிச் சொதப்பாம இருக்க, என்ன செய்யணும்?

* ஃப்ரெண்ட் தகுதியில் இருந்து பாய் ஃப்ரெண்டாக புரோமோஷன் கிடைக்கும் வரை பொறுமை அவசியம். அனுப்பின மெசேஜுக்கு புளூ டிக் காமிக்குது. ஆனா, ரிப்ளை இன்னும் வரலைங்கிறதுக்காகக் கோபம் தலைக்கேறி நாக்குப்பூச்சி வெளியே வரும். உருட்டுக் கட்டையால் அதை அடிச்சுப்போட்டு சைலன்ட் சிவராமனா இருக்கப் பழகிக்கணும்.

வெல்வெட் கேக்கே பொண்ணுங்களுக்கு போரடிக்க ஆரம்பிச்சிருச்சாம். அதனால் வழக்கமான ‘என்ன பண்ற?', `சாப்ட்டியா?’ போன்ற கேள்விகளைக் கேட்டு கடுப்பேத்துற வேலை அறவே கூடாது. வாட்ஸ்அப்? `இன்னைக்கு நாள் எப்படிப் போச்சு?', `உங்க ட்ரெஸ் பிரமாதம்!' மாதிரியான ஸ்மைலி வரக்கூடிய கேள்விகள், நீங்க ஈஸியா பாஸ் பண்ண ஹெல்ப் பண்ணும்.

 * ஒரு பொண்ணு உங்களைக் கவனிக்க ஆரம்பித்ததும் உடனடியா செய்யவேண்டியது நல்ல அழகான புரொஃபைல், அருமையான ஸ்டேட்டஸ் மாத்துறது. பசங்களோட சரக்கு அடிக்கிறப்ப எடுத்த போட்டோ, க்ளோஸ்அப்ல முகத்தைக் காட்டி பயமுறுத்துற மாதிரி எல்லாம் வெச்சா அதுக்கு அப்புறம் அந்தப் பொண்ணு `அண்ணா'னு கூப்பிடுறதை அந்த ஆண்டவனாலகூட மாத்த முடியாது ப்ரோ.

 * உண்மையா இருக்கிறது ரொம்ப முக்கியம். பொண்ணுக்கு ஷ்ரேயா கோஷல் பிடிக்கும்கிறதுக்காக உங்களுக்குப் பிடிச்ச சாதனா சர்கத்தை விட்டுக்கொடுக்காதீங்க. ஷ்ரேயா பாடினதில் எது ரொம்பப் பிடிக்கும்னு அவங்ககிட்டயே கேட்டு வாங்கி ரசிக்க ஆரம்பிங்க.

ரகசியம் காக்கப்படுறதும் ரொம்ப அவசியம். ஒரு பொண்ணுகிட்ட பேச ஆரம்பித்ததுமே, ‘அவகூட விடிய விடிய சாட் மச்சான்!’னு எக்ஸ்ட்ரா பிட்டுகளைப் போட்டு ஊரெல்லாம் டமாரம் அடிப்போமே... முதல்ல இந்தப் பழக்கத்தை மாத்திக்கணும்.

அர்னாப் கோஸ்வாமி மாதிரி ஒட்டுமொத்த சாட்லயும் நீங்களே பேசிக்கிட்டு இருந்தா, ஆட்டோ பிடிச்சு வந்து நேர்லயே பொளேர்னு அறை கொடுப்பாங்க. அவங்களையும் பேசவிடுங்க ஃப்ரெண்ட்ஸ். மனம்விட்டுப் பேசப் பேசத்தான் உங்களைப் பிடிக்க ஆரம்பிக்கும்.

சினிமாவில்தான் காமெடி பண்றவங்களுக்கு ஃபிகர் செட்டாகாது. நிஜ வாழ்க்கையில் காமெடி பண்றவன்தான் கிங். உங்ககூட சாட் பண்ணாலே மனசு ஃப்ரீ ஆகணும். அந்த அளவுக்கு உங்க சாட் இருக்கணும். அதுக்காக காமெடி பண்றேன்னு கோபம் வர்ற அளவுக்கு அவங்களைக் கலாய்ச்சா பிளாக் கன்ஃபார்ம்டு.

மணிக்கணக்காப் பேசுற நாள் சீக்கிரம் வரும். அதுக்கு முன்னாடி க்ளைமாக்ஸ்ல,  ஹீரோ வில்லன்கிட்ட பேசியே திருத்துற மாதிரி ரொம்ப நீளமான பதில் அனுப்பாதீங்க. மணிரத்னம் பட டயலாக் மாதிரி சுருக்கமா இருக்கட்டும் உங்க ரிப்ளை. மேக் இட் சிம்பிள்!

அப்புறம் ரொமான்ஸ் பண்றேன்னு கேவலமா பேசுறது, `உன் ஃப்ரெண்ட் செம பியூட்டி!'னு ஜொள்ளு வடியுறது, `மீட் பண்ணலாமா?'னு கேட்டுக் கடுப்பேத்துறது, இந்த மாதிரி வேலை எல்லாம் பண்ணீங்கன்னா... ஸாரி பாஸ்! கடைசி வரைக்கும் ஊட்டிக்கு தனியாத்தான் போகணும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்