ஜென் Z - நெஞ்சம் நிமிர்த்து... போனை உயர்த்து!

ஒயிட், ஓவியம்: காமேடி

லகம் முழுக்க இளைஞர்கள் எதிர்கொள்ளும் லேட்டஸ்ட் பிரச்னை ஐஹன்ச் (ihunch).

`ஸ்மார்ட்போன் மற்றும் டேப்களை மிக அதிகமாகப் பயன்படுத்துவதால் நம்முடைய உடலின் தோரணை (Posture) மாறுகிறது' என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அப்படி ஏற்பட்ட இந்த மாற்றத்துக்கு வைத்திருக்கும் புதிய பெயர்தான் `ஐஹன்ச்'. இது, நம்முடைய உடல்நிலையை மட்டும் அல்ல மனநிலையையும் பாதிக்கக்கூடியது என்று பயமுறுத்துகிறார்கள்.

தோள்களை ஒரே பக்கமாகச் சாய்த்து, முதுகெலும்பு வளைந்து, தலை குனிந்து எந்த நேரமும் ஸ்மார்ட் போன்களில் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்துகொண்டும், வாட்ஸ்அப் பார்த்துக்கொண்டும், மெசேஜ்கள் அனுப்பிக்கொண்டும் இருப்பதால்தான் இந்த நிலை உருவாகிறது. மேற்குறிப்பிட்ட வேலைகளை எல்லாம் பார்க்கும்போது, நாம் அளவுக்கு அதிகமான நேரம் ஒரே பொசிஷனில் இருப்பதால் இது உருவாகிறது. மொபைலை தாழ்வாக வைத்து அதற்கேற்ப குனிவதால், முதுகெலும்பின் மீது அதிக தாக்கம், அதிக எடையோடு பாய்வதால் பாதிப்பு ஏற்படுகிறது.

`இந்த ஐஹன்ச் பிரச்னை, உடலின் உள்ளுறுப்புகளைக்கூட பாதிக்கத் தொடங்கும்' என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். `இது உடலை மட்டும் அல்ல, மனதளவிலும் மன அழுத்தம், நினைவாற்றல் இன்மை முதலான பாதிப்புகளையும் உண்டாக்கும்' என்கிறார்கள்.

 இதை எப்படி எதிர்கொள்வது?

எப்போதும் சரியான பொசிஷனைப் பின்பற்றுதல் நல்லது. எப்போதும் தலை மற்றும் நெஞ்சம் நிமிர்ந்து ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதை வாடிக்கையாகக் கொள்ளவேண்டும். அதோடு அதிக நேரம் ஒரே பொசிஷனில் இருக்க நேர்ந்தால், தசைகளைத் தளர்த்தும் சின்னச்சின்ன பயிற்சிகளைச் செய்யலாம். அவ்வப்போது தலையை வலது இடதாக அசைக்கும் பழக்கத்தைப் பின்பற்றலாம்.

இப்படிச் செய்வதன் மூலம் நம்முடைய உடல்நலம் மட்டும் அல்ல, மனநலம், நம்பிக்கை மற்றும் நினைவாற்றலையும் அதிகரிக்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்