ஜென் Z - தேடலாம்... ரசிக்கலாம்!

ஞா.சுதாகர்

டூர் போகப்போறோம் என்றதும் நேரிலும் போனிலும்  ஏஜென்ட்கள், கைடுகள் நம்மை விடமாட்டார்கள். ஆனால், அந்த வேலைக்கும் தனது தயாரிப்பான `கூகுள் ட்ரிப்ஸை’ இறக்கியிருக்கிறது டெக் அசுரன் கூகுள்.

கூகுள் ட்ரிப்ஸை முதல்முறை பதிவிறக்கம் செய்துவிட்டு, நமது கூகுள் அக்கவுன்ட்டைக் கொடுத்து, வழக்கம்போல இதைப் பயன்படுத்தலாம். சிக்கலான சேவை என்றாலும்கூட, எளிமையாக இருக்கும்படி அப்ளிக்கேஷனை டிசைன் செய்துள்ளது கூகுள். நீங்கள் செல்லவேண்டிய இடத்தின் பெயரைக் கொடுத்தால் போதும். அந்த ஊரின் முழு விவரத்தையும் உங்கள் முன்னர் கொண்டுவந்து கொட்டுகிறது. தற்போது சென்னை உள்ளிட்ட உலகின் டாப் 200 நகரங்களுக்கு மட்டும், இதை முழுமையாக அமல்படுத்தியுள்ளது கூகுள்.

Reservation, Things to do, Saved places, Day plans, Food and Drink, Getting Around, Need to know என ஏழு ஆப்ஷன்களைத் தருகிறது கூகுள் ட்ரிப்ஸ். கொஞ்சம் பிரபலம் இல்லாத நகரங்களை இதில் தேடும்போது, இந்த ஆப்ஷன்களின் எண்ணிக்கை குறையலாம். நாம் செல்லும் இடங்களில், பகலில் எந்தெந்த இடங்களைச் சுற்றிப் பார்க்கலாம், எங்கே செல்ஃபி எடுக்கலாம், காலனி ஆதிக்கத்தின் நினைவாக இருக்கும் நினைவுச் சின்னங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், இயற்கை வாசஸ்தலங்கள், கட்டடங்கள், ஆன்மிகத் தலங்கள், பிரபல ஷாப்பிங் மால்கள், உணவகங்கள், அருங்காட்சியகங்கள், பூங்காக்கள்... என நீங்கள் நிற்கும் இடத்துக்கு வெகு அருகில் இருக்கும் இடங்கள்... என வகைவகையாக இடங்களின் விவரங்களை நமக்குத் தருகிறது ட்ரிப்ஸ். நாம் சுற்றுலா எனும் ஒரு வார்த்தைக்குள் அடக்கும் அனைத்து விஷயங்களையும், தனித்தனியே பிரித்து, நமக்கு ஏற்றவாறு காட்டி அப்ளாஸ் அள்ளுகிறது கூகுள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்