பால்யத்தின் வேரில் பழுத்த வானம்!

கவிதை: கார்த்திக் நேத்தா, ஓவியம்: ஹாசிப்கான்

ஞ்சிதத்துக்குத் தரவேண்டிய முத்தத்தை 
மார்கழி மாதத்துப் பூனைக்குத் தருகிறேன் 
ராதாவுக்குக் கொடுக்கவேண்டிய பார்வையை 
ஆரஞ்சுப்பழத் தோலை மோந்துகொண்டிருக்கும் 
நாய்க்குட்டிக்குத் தருகிறேன் 
சாந்திக்கு உருகவேண்டிய காமத்தை 
பிஞ்சுக் குழந்தையின் உறக்கத்திற்குத் தருகிறேன் 
பார்வதியிடம் காட்டவேண்டிய சினத்தை 
என் கண்ணாடிக்குக் காட்டுகிறேன் 
சுதாவுக்கான கண்ணீரை 
செருப்பு தைக்கும் நரசம்மாவிற்குத் தருகிறேன் 
எல்லோருக்கும் செலுத்தவேண்டிய அன்பை 
எனக்கு நானே தந்துகொள்கிறேன் 
என் சைக்கிள் போய்க்கொண்டிருக்கிறது நீரில்
நம்ப முடியாமல் இருக்கலாம் 
என் தண்டவாளம் போய்க்கொண்டிருக்கிறது 
ஒளியில்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்