உணவு நல்லது வேண்டும்!

கொழுப்பைக் கரைக்கும் கொள்ளு சூப்

தேவையானவை: கொள்ளு – 4 டீஸ்பூன், மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன், பூண்டு பல் – 5, தக்காளி – 2, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை: வெறும் கடாயில் கொள்ளைப் போட்டு சிவக்க வறுக்க வேண்டும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு அதனுடன் பூண்டு, தக்காளி சேர்த்து, நன்றாக அரைக்க வேண்டும். இதில் தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிட வேண்டும். நன்கு வெந்ததும் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்க வேண்டும்.

பயன்கள்: கொழுப்பைக் கரைக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும். உடலில் தேவையற்ற நீர், நச்சுக்களை அகற்றும். புரதச்சத்து நிறைந்திருப்பதால், உடல் வளர்ச்சிக்கு உதவும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்