ஆண்பால் பெண்பால் அன்பால் - 4

#MakeNewBondsஜோதிமணி, படங்கள்: அருண் டைட்டன், மது இந்தியா சண்முகம்

வாழ்வின் ஆதாரமான ‘ஆண்-பெண் உறவுகளுக்குள் மட்டும் ஏன் இத்தனை வேறுபாடுகள்? தொழில்நுட்பங்கள் வளர வளர, விரிசல்களும் வித்தியாசங்களும் ஏன் இவ்வளவு அதிகரிக்கின்றன? சரிசெய்யவேண்டியது எங்கே? நம் குழந்தைகளுக்கு, ஆண்-பெண் மனங்கள் எப்படி இயங்குகின்றன என்பதை எப்போது கற்றுக்கொடுக்கப்போகிறோம்? காதல், நட்பு, உறவு, பிரிவு... என ஆண்-பெண் இடையே இருக்கும் இந்த இணைப்பைப் பலப்படுத்தும் அந்த ஒன்று எது?' விடைகளுக்கான விகடனின் தேடலே இந்தத் தொடர். வாரம் ஒரு பிரபலம் தங்களுடைய வாழ்வின் வழியே, கற்றலின் வழியே வெளிச்சம் பாய்ச்ச உள்ளனர்.

டெல்லியின் பிரதான சாலை ஒன்றில், ஓர் இளைஞன், ஓர் இளம் பெண்ணைத் தடுத்து நிறுத்துகிறான். அவளைக் கத்தியால் மீண்டும் மீண்டும் உடல் எங்கும் குத்திக்கொண்டே இருக்கிறான். அதை கண்டும் காணாமல் மக்கள் கடந்துசெல்கின்றனர். ரத்த வெள்ளத்தில் அந்தப் பெண் அலறித் துடிக்கிறார். `22 கத்திக் குத்துகள்' என ஒற்றை வரிச் செய்தி தொலைக்காட்சியில் ஸ்க்ரால் ஆகிறது. காதலை ஏற்க மறுத்ததுதான் அந்த இளம்பெண் செய்த குற்றம்.தொலைக்காட்சியின் முன்னால், நெடுநேரம் அப்படியே உறைந்துபோய் அமர்ந்திருந்தேன்.

இங்கே வேட்கை என்பது காதல், மதம், சாதி, ஒழுக்கம்... என்று எதன் பெயரிலாவது பெண்ணின் உடலை அடைவது அல்லது வன்மத்தோடு அழிப்பது என்ற திசையில்தான் தொடர்ந்து பயணிக்கிறது. பெண்களை பாலினத்தின் அடிப்படையில் பலவீனமானவர்களாகவும், உடலாகவும், உரிமைப்பொருளாகவும் பார்க்க மட்டுமே நாம் கற்பிக்கப்பட்டிருக்கிறோம். இந்தக் கற்பிதங்கள் காலங்காலமாக நம்மை மூளைச்சலவை செய்துவருகின்றன. பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள், பாலியல் வன்கொடுமைகள் என அனைத்துக்குப் பின்னாலும் இயங்குகிற, அடிப்படையான உளவியல் இதுதான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்