"நட்பை மிஸ்யூஸ் பண்ண விரும்பலை!”

ம.கா.செந்தில்குமார்

‘‘ `புதுப்பேட்டை’ படத்தில் பாலகுமாரன் சார், ‘கடவுள் இருக்கான் குமாரே!’னு எழுதி யிருப்பார். அந்தப் படம் வந்தப்பவே அந்த வசனம் வைரல். பெரிய பிரச்னையில் இருந்து எஸ்கேப் ஆகிட் டோம்னா, ‘கடவுள் இருக்கான் குமாரு’னு சென்னையில் சொல் வாங்க. ‘இதையே தலைப்பா வெச்சா எப்படி இருக்கும்?’னு முதன்முதல்ல சொன்னது ஜி.வி.பிரகாஷ்தான். இது கதைக்கு பொருத்தமாவும் எல்லாரையும் லோக்கலா இணைக்கிற வார்த்தை களாவும் இருந்ததால், அதையே படத் தலைப்பா வெச்சுட்டோம்’’ - சந்தானத்தை வைத்து மற்றவர் களைக் கலாய்த்துக் கொண்டிருந்த இயக்குநர் ராஜேஷ்.எம், இப்போது இளம் பார்ட்னர் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்திருக்கிறார்.

‘‘ஜி.வி.பிரகாஷை எப்படி இந்தப் படத்துக்கு ஃபிக்ஸ் பண்ணீங்க?’’

‘‘‘ஒரு மியூஸிக் டைரக்டர், நடிகராகும்போது சின்னச்சின்னத் தயக்கங்கள் இருக்கும். ‘ஏதோ சின்னதா ட்ரை பண்றார்’னு நினைச்சுட்டு இருந்தப்ப, ‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’வில் எதையும் யோசிக்காமப் பண்ணியிருந்த அவரோட ஆட்டிட்யூட் பிடிச்சிருந்தது. தவிர, அது இளைஞர்களைக் கவர்ற வகையிலும் இருந்தது. ‘யூத்ஃபுல்லா ஜாலியான ஒரு படம் பண்ணலாம்னா நிச்சயமா ஜி.வி-யோடு தான்’னு அப்பவே தோணியது. பிறகு, இந்த ஸ்க்ரிப்ட்டும் அதே மாதிரி அமைஞ்சதால், நான்தான் முதல்ல அவரை அப்ரோச் பண்ணினேன். அப்பதான் ஜி.வி-யும் ‘அம்மா க்ரியேஷன்ஸ்’ சிவா சாரும் ஒரு புராஜெக்ட்டுக்காகப் பேசிட்டு இருந்தாங்க. எனக்கும் சிவா சார் ரொம்ப நாள் பழக்கம். அதனால் படம் டக்குனு டேக் ஆஃப் ஆகிடுச்சு.’’

‘‘படத்தின் கதை என்ன?’’

‘‘ஜி.வி., ஆனந்தி, நிக்கி கல்ராணி, மூணு பேரும் காலேஜ் கடைசி வருஷம் படிக்கும் ஸ்டூடன்ட்ஸ். மூவருமே ஃப்ரெண்ட்ஸ். மெயின் ஸ்க்ரிப்ட், அந்த மூணு பேருக்குள்ள தான் இருக்கும். ஜி.வி., இவங்கள்ல ஒருத்தரை லவ் பண்ணுவார். அதில் பிரச்னை. சின்ன பிரேக்அப். அடுத்து இன்னொருத்தரை லவ் பண்ணுவார். `இதை விடலாமா... அதைத் தொடரலாமா..!'ங்கிற குழப்பம். இந்த முக்கோணக் காதல்தான் படம்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்