“தனுஷ் எப்படிப்பட்டவர்னு எனக்குத் தெரியும்!”

ஆர்.வைதேகி, படம்: பா.காளிமுத்து

புத்தகம் எழுத ஆரம்பித்தது, ப்ளான் பண்ணி நடந்தது இல்லை. சின்ன வயசுல நிறைய எழுதுவேன். பிளாக் எழுதுறது பற்றி என் ஃப்ரெண்ட்ஸ் சொன்னாங்க. அதில் என்ன எழுதலாம்னு டிஸ்கஸ் பண்ணப்போ, `செலிப்ரிட்டி குழந்தைகளுக்கு எல்லாமே ஈஸியா கிடைச்சுடும்னு நாங்க நினைச்சுட்டிருக்கோம். ஆனா, அவங்க பிரச்னைகள் என்ன? எதை எல்லாம் மிஸ் பண்றாங்க? இப்படி நிறைய எழுதலாமே'னு சொன்னாங்க. அப்படித்தான் எழுத ஆரம்பிச்சேன்'' - ‘ஸ்டேண்டிங் ஆன் தி ஆப்பிள் பாக்ஸ்’ என்ற புத்தகத்தை எழுதிக்கொண்டிருக்கும் ஐஸ்வர்யா, இன்னொரு பக்கம் ‘சினிமா வீரன்’ என்னும் ஆவணப்படத்தை இயக்குவதில் தீவிரமாக இருக்கிறார். பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அடுத்த  படத்தின் தயாரிப்பு வேலைகளிலும் ஐஸ்வர்யா செம பிஸி.

`` `சினிமா வீரன்’கிறது ஸ்டன்ட் மென் பற்றிய டாகுமென்ட்ரி மட்டும் இல்லை. இது மூணு பார்ட். அதுல ஒரு பார்ட்தான் ஸ்டன்ட் மென் பற்றியது. இவ்வளவு கஷ்டப்படுற அவங்களுக்கு எந்த இன்ஷூரன்ஸும் இல்லை.  அந்தக் கஷ்டத்துலேயும் அவங்க பசங்களும் இதே வேலைக்கு வர்றாங்க. ஸ்டன்ட் யூனியன் கார்டு எடுக்கிறதை, அவங்க பெருமையா நினைக்கிறாங்க. பெரிய பொருளாதாரப் பின்னணி இல்லாத, அவங்களோட கஷ்டங்களைப் பதிவுபண்ணணும்னு நினைச்சேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்