உலக நாயகி!

அதிஷா

டித்தால் அமெரிக்காவில் படிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் 12 வயது பிரியங்கா சோப்ரா. அப்பாவும் அம்மாவும் விவாதித்தனர். இருவரையும் சம்மதிக்கவைத்தார். நண்பர்களால் அமெரிக்கா அவருக்கு ரொம்பப் பிடித்துவிட்டது. ஆனால், பள்ளியில்தான் பிரச்னை... `உன் மேல மசாலா வாசனை அடிக்குதுடி, தள்ளி உட்காரு…’ என தன் வாழ்க்கையில் முதன்முதலாக இன துவேஷத்தைச் சந்தித்தார் பிரியங்கா. சக மாணவிகள் அவரை, ‘ஆசியப் பெண்’, ‘ப்ரௌன் கேர்ள்’ என விநோதமான பட்டப் பெயர்கள் வைத்து தொடர்ச்சியாக அவமதிக்க, பிரியங்காவால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அந்த மாணவிகளைக் கண்டாலே நடுங்குவார்... Xenophobic.

‘அந்தப் பெண்ணின் பெயர் ஜீனைன்.  அவள் என்னை நடத்திய விதம் நோகடிக்கக் கூடியதாக இருந்தது. நாம் குழந்தையாக இருக்கும்போது, நம்முடைய வேர்கள் பற்றி பெருமையாக  நினைத்துக்கொண்டிருப்போம். ஆனால், அவைதான்  நாம் அவமானப்பட காரணமாக இருந்தால், அதைத் தாங்கிக் கொள்ளவே முடியாது.’

இனவெறி மாணவர்களைச் சமாளிக்க முடியாமல் இந்தியாவுக்கே திரும்பினார் பிரியங்கா. அந்த நாட்டின் மீது இருந்த, அத்தனை வண்ணங்களும் சித்திரங்களும் அழிந்துபோயிருந்தன. இனி இந்த ஊருக்கே வரக் கூடாது என்பதுதான் பிரியங்கா அப்போது எடுத்த முடிவு.

20 ஆண்டுகளுக்குப் பிறகு பிரியங்கா அமெரிக்காவுக்குப் போகிறார்... ஆனால், இந்த முறை 50 திரைப்படங்களில் நடித்த பாலிவுட்டின் மிகப் பெரிய நட்சத்திரமாக, பல விருதுகளை வென்றவராக. அமெரிக்காவின் பிரபலமான தொலைக்காட்சி நிறுவனம் அழைத்திருந்தது. அந்த நிறுவனத்தின் சீரியல் ஒன்றில் பிரியங்காதான் நாயகி. முழுத் திரைக் கதையையும் கொடுத்துப் படிக்கச் சொன் னார்கள். படித்து முடித்து ஷூட்டிங்குக்குத் தயாராக இருந்தவரை, ஆடிஷன் பண்ண வேண்டும் என அழைத்தனர். ஏழு பேர் எதிரில் தன் நடிப்புத்திறனை வெளிப்படுத்தி, நிரூபித்து, வாய்ப்பை உறுதிசெய்ய வேண்டும். இதெல்லாம் அவருக்கு அவசியமே இல்லாதது. பாலிவுட்டின் ராணிகளில் ஒருவர் பிரியங்கா. ஆனால், அவருக்கு அந்தச் சந்தர்ப்பம் மிகவும் புதியதாக இருந்தது. வெற்றிகளை நேசிக்கிற துடிப்பு அவரிடம் தீராமல் இருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்