அப்போ ஹெச்.ஆர்... இப்போ நடிகை!

பரிசல் கிருஷ்ணா, நா.சிபிச்சக்ரவர்த்தி, படங்கள் பா.காளிமுத்து

ல்ல படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்த சிலரை, ``யாரு இவரு... பின்றாரே!’’ என ஆச்சர்ய ஸ்மைலியோடு கடந்திருப்போம். அப்படி நம்மை வியக்கவைத்த குணச்சித்திரக் கலைஞர்கள் இவர்கள்...

நேர்த்தியான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார் வினோதினி. சமீபத்திய படம்... ‘ஆண்டவன் கட்டளை’. நகைச்சுவை கலந்த யதார்த்த உடல்மொழி, இயல்பான வசன உச்சரிப்பு.

“நேஷனல் பப்ளிக் ஸ்கூல், எத்திராஜ் காலேஜ், பெங்களூரில் எம்.பி.ஏ., சென்னைப் பல்கலைக் கழகத்தில் எம்.எஸ்சி சைக்காலஜி, டிப்ளமா இன் யோகா தெரபி... எனப் பிடிச்சதை எல்லாம் படிச்சேன். பிறகு ஒரு பெரிய நிறுவ னத்தில் ஹெச்.ஆர் மேனேஜர் வேலை. மாலை நேரங்களில் நாடக நடிப்பு. வேலையில் திருப்தி கிடைக்கலை. படிச்சதை விட்டுட்டு, பிடிச்சதைச் செய்வோம்னு, 2006-ம் ஆண்டில் முழுநேரமா கூத்துப்பட்டறையில் சேர்ந்தேன். மூன்றரை வருடப் பயிற்சிக்குப் பிறகு தனியே நாடகங்களில் நடிச்சேன். அதைப் பார்த்து வந்தவைதான் இயக்குநர் பிரியதர்ஷனின் ‘காஞ்சிவரம்’, இயக்குநர் சரவணனின் ‘எங்கேயும் எப்போதும்’ பட வாய்ப்புகள்.

இப்போது ‘நாகர்கோவில் எக்ஸ்பிரஸும் நாடகக் கம்பெனியும்’, ‘ஆயிரத்தோரு இரவுகள்’னு இரண்டு நாடகங்கள் எழுதி இயக்கியிருக்கேன். எனது `தியேட்டர் ஜீரோ’ குழுவின் நாடகங்கள் அவை.
‘எங்கேயும் எப்போதும்’ படத்துல அனன்யாவின் அக்காவா பண்ணிருந்த கேரக்டர் எனக்கு நல்ல அடித்தளம். அதுதான் ‘கடல்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’,

‘ஓ காதல் கண்மணி’, ‘பிசாசு’, ‘அப்பா’, ‘ஆண்டவன் கட்டளை’ வரை என்னை அழைச்சுட்டு வந்திருக்கு. இந்தமாதிரி சரியான வேடங்கள்  அமைவது மிகப்பெரிய சவால். ‘அண்ணி கேரக்டர்’னு சொல்வாங்க. ‘சரிங்க... அந்த கேரக்டருக்குப் பேராவது இருக்கா?’னு கேட்பேன். ‘படத்துல கதவைப் பிடிச்சுட்டு நிக்கிற அண்ணி கேரக்டர்னாலும், நல்லா எஸ்ட்டாப்ளிஷ் பண்ற மாதிரி இருக்கும்’னு சில இயக்குநர்கள் சொல்வாங்க. அந்த அளவுக்குக்கூட வேலை இல்லைன்னா அந்த வாய்ப்பையே மறுத்துடுவேன்” என்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்