"ரஜினி டான்ஸ்தான் அடையாளம்!”

பரிசல் கிருஷ்ணா, நா.சிபிச்சக்ரவர்த்தி படங்கள் பா.காளிமுத்து

ல்ல படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்த சிலரை, ``யாரு இவரு... பின்றாரே!’’ என ஆச்சர்ய ஸ்மைலியோடு கடந்திருப்போம். அப்படி நம்மை வியக்கவைத்த குணச்சித்திரக் கலைஞர்கள் இவர்கள்...

நம்பி வந்தவங்களைக் கைவிட மாட்டோம் மெட்ராஸ்காரங்க சார்!’ - ரஜினியிடம் இந்த வசனத்தைச் சொல்லி ‘கபாலி’யில் அறிமுகமாவார் விஷ்வந்த். ``அது சினிமாவுக்காகச் சொல்லியிருந்தாலும், என் மனசுல இருந்து வந்த வார்த்தைகள் ப்ரோ. சென்னை என்னை அப்படித்தான் வெச்சிருக்கு” என்கிறார் இந்த திருநெல்வேலி மாவட்டத்துத் திறமைசாலி.

“எனக்கு டான்ஸ்தான் உயிர். ‘நீ டான்ஸ்ல வாங்கிட்டுவந்த பரிசுகளை வைக்கிறதுக்கே தனி ஷெல்ஃப் வாங்கிருக்கோம்’னு சொன்னார் செயின்ட் ஜான்ஸ் காலேஜ் முதல்வர். லதா ரஜினிகாந்த் மேடம் நடத்திய ‘ரஜினி - 25’ நடனப்போட்டியில் ஆடி ‘நம்பர் ஒன்’னா செலக்ட் ஆனேன்.  மைக்கேல் ஜாக்ஸன் டான்ஸ் ஆடி முடியறப்ப டக்குனு ரஜினி ஸ்டைல்ல முடிச்சேன். அதுக்கு கோல்டு மெடல், சிங்கப்பூர் ஃபேம்லி டூர் ட்ரிப்னு நிறையப் பரிசுகள் கிடைத்தன.”

தொலைக்காட்சி ஒன்றில் நடன நிகழ்ச்சிக்கு ஸ்ரீதர் மாஸ்டர் நடுவராக வந்திருந்தார். அப்போது விஷ்வந்த் நடனம் அமைத்த பாடல் ஒன்றில் கவரப்பட்டு, அசிஸ்டன்ட்டாக சேர்த்துக்கொண்டார்.

``ஸ்ரீதர் மாஸ்டரிடம் வேலைபார்க்கும் போதுதான், ‘வெளுத்துக்கட்டு’ பட வாய்ப்பு வந்தது. படத்தின் முதல் காட்சியே என் கையை வெட்டுவதாகத்தான் இருக்கும். பயந்துகொண்டே நடித்தேன். ‘முதல் சீனே ஹெவியா இருக்கு. நல்லா பண்ணலைன்னா சார் கோபப்படுவார்’னு வேறு பயமுறுத்தினாங்க. ஒரே டேக்கில் நான் ஓ.கே பண்ண,  எஸ்.ஏ.சந்திரசேகர் சார் அழைத்துப் பாராட்டி ஆயிரம் ரூபாய் பரிசாகக் கொடுத்தார். கேமராமேன் சுகுமாரும் பாராட்டினார். `தடையறத் தாக்க’ படத்துக்கு அவர் கேமராமேனாகப் பணிபுரிந்தபோது, அருண் விஜய் சார் ஃப்ரெண்ட் கேரக்டருக்கு என்னை சிபாரிசுசெய்தார். `தோனி’ படத்தில் பிரகாஷ்ராஜுடன் நடித்தேன். அப்படியே தொடருது பயணம்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்