“ஜமீன்தாருக்கு அழுக்குவேட்டி கொடுத்தாங்க!”

பரிசல் கிருஷ்ணா, நா.சிபிச்சக்ரவர்த்தி படங்கள் பா.காளிமுத்து

ல்ல படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்த சிலரை, ``யாரு இவரு... பின்றாரே!’’ என ஆச்சர்ய ஸ்மைலியோடு கடந்திருப்போம். அப்படி நம்மை வியக்கவைத்த குணச்சித்திரக் கலைஞர்கள் இவர்கள்...

தமிழ் சினிமா ஹீரோ, ஹீரோயின்களுக்கு லேட்டஸ்ட் அப்பா ஃப்லோரென்ட் பெரெரா (Florent Pereira). ‘கயல்’ படத்தில் ஆனந்திக்கு அப்பாவாக நடித்து கவனிக்கவைத்தவர். இவர் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஜி.எம் என்பது ஸ்பெஷல் தகவல்.

“எனக்குச் சொந்த ஊர் கும்பகோணம்.

எம்.ஏ முடிச்சுட்டு கொஞ்சம் வருஷம் அரபு நாட்டில் வேலையில இருந்தேன். 1995-ல் விஜய் டி.வி-யில் சேர்ந்தேன். அடுத்து கலைஞர் தொலைக்காட்சிக்கு வந்துட்டேன். தமிழ் தொலைக்காட்சி வரலாறே 23 வருஷம்தான். அதுல 22 வருஷம் நான் தொலைக்காட்சியில் இருக்கேன். இப்ப தொலைக்காட்சி வேலை பார்த்துக்கிட்டே சினிமாவுல நடிக்கிறேன்.”

“டிவி ஜி.எம்., எப்படி சினிமாவுக்கு வந்தார்?”

“கலைஞர் டி.வி-யில் ‘நாளைய இயக்குநர்’னு நிகழ்ச்சி நடந்துட் டிருந்தது. அதுல ஒரு சீஸன் பிரபு சாலமன் சார் கெஸ்ட்.  நிகழ்ச்சியிலும் ‘வணக்கத்துக்குரிய அன்பு நெஞ்சங்களே...’னு வரவேற்றுப் பேசினேன். அந்த நிகழ்ச்சி முடிஞ்ச அடுத்த நாளே பிரபு சாலமன் சார் ஆபீஸ்ல இருந்து போன்... ‘சார் ‘கயல்’னு ஒரு படம் எடுக்கிறார். நீங்க அதுல ஜமீன்தாரா நடிக்கணும்னு கூப்பிட்டாங்க.

‘நடிக்கறீங்களா?னுகூடக் கேட்கலை. நீங்க நடிங்க’னுதான் சொன்னாங்க. மதுரைக்கு வரச் சொன்னாங்க. அங்கே போனா, ஒரு வயக்காட்டுல எங்கேயோ ஒரு கிராமத்துக்குக் கூட்டிட்டுப் போனாங்க.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்