ஊர் சந்தை - செம்மையா வாழ்வோம்!

வெ.நீலகண்டன், படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

வாசலிலேயே மண்பாண்டங்கள் குவிந்திருக்கின்றன. பானைகள், சட்டிகள், குவளைகள், கைவினைப் பொருட்கள் என ஏகப்பட்ட கலைப்பொருட்கள். மண்பாண்டத் தொழிலாளி ஒருவர் அருகே அமர்ந்திருக்கிறார். அவருடைய வழிகாட்டுதலில் குழந்தைகளே களிமண்ணைப் பிசைந்து குட்டிக் குட்டி மண்பாண்டங்கள் செய்கிறார்கள். அதைக் கடந்து உள்ளே சென்றால், பாரம்பர்யமான தின்பண்டங்கள், குளிர்பானங்கள்.

எள்ளும் கடலையும் கலந்து அரைத்துச் செய்த லட்டு, இலந்தைப் பழத்தைப் பொடித்து, மிளகாய், பெருங்காயம், நாட்டுச் சர்க்கரை சேர்த்து செய்த இலந்தைப்பொடி, கருப்பட்டி அல்வா, பொரி உருண்டைகள், தட்டை, தேங்காய்மிட்டாய், தானிய மிக்ஸர், நன்னாரி சர்பத், நீர்மோர்... இவை எல்லாம் சமீபத்தில் சாப்பிட்டது உண்டா?

நாவூறவைக்கும் நாட்டுப்புற ருசி. வகை வகையான தின்பண்டங்கள். அதையொட்டிய மரபு வழி உணவு. அதற்குப் பக்கத்தில் இயற்கை வேளாண்மையில் விளைந்த காய்கறிகள், தேங்காய்கள், நாட்டுச் சர்க்கரை, செக்கு எண்ணெய், கருப்பட்டி, நிலக்கடலை, பருப்புகள், பயறுகள் என, குடும்பத்துக்குத் தேவையான அத்தனை பொருட்களும் விற்கப்படுகின்றன. மக்கள், பையும் கையுமாக அலைமோதுகிறார்கள்.

ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு அன்று சென்னையில் கூடுகிறது ஊர் சந்தை!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்