நீரோடையின் சத்தம்... ராப்பட்சிகளின் நாதம்!

இரா.கலைச்செல்வன் - படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

விடியல் தொடங்கும் நேரம். முதுகில் கொஞ்சம் சுமைகள். நாகலாபுரம் மலை அடிவாரத்தில், எல்லோரும் கூடி நிற்கிறார்கள். போகும் வழி, சென்று சேரவேண்டிய இடம் குறித்த விவரங்கள் சொல்லப்படுகின்றன. அங்கு ஒரு தாத்தா, கையில் கோலுடன் நிற்கிறார். அவர் கோலில் ஜவ்வுமிட்டாய் இருக்கிறது. எல்லோரும் உற்சாகமாக ஜவ்வுமிட்டாயைக் கையில் கடிகாரமாகக் கட்டிக்கொள்கிறார்கள். கலகலப்பான சத்தம் அந்த இடத்தை நிரப்புகிறது. மலையை நெருங்குகிறார்கள். பேச்சை நிறுத்தி அமைதியாகிறார்கள்.

ஒருவர் பின் ஒருவராக அந்தப் புதர் வழியில் குனிந்து செங்குத்தான மலைப்பாதையில் ஏறத் தொடங்குகிறார்கள்.

``காட்டுக்குள் போக ஆரம்பித்துவிட்டால், நாங்கள் அதிகம் பேச மாட்டோம். சத்தம் இல்லாமல் இயற்கையின் சத்தங்களோடு, எங்கள் காலடிச் சத்தம் மட்டுமே கேட்கும்’’ எனக் கிசுகிசுக்கிறார் பீட்டர் வேன்கேட். இவர் குறிப்பிடும் ‘நாங்கள்’ சென்னை ட்ரெக்கிங் கிளப்பைச் சேர்ந்தவர்கள்.

கற்கள், முட்கள் என முரட்டுத்தனமான பாதையைக் கடந்து, மூன்று மணி நேரத்துக்குப் பிறகு மலை உச்சியை அடைகிறார்கள். `அடுத்தது என்ன?’ என்ற ஆவலோடு காத்திருக்க, `நெக்ஸ்ட்டு... ரெஸ்ட்டு!’ என எல்லோரும் அப்படியே இளைப்பாறத் தொடங்கு கிறார்கள்.
 
தன்னுடைய ஷூக்களைக் கழற்றிப் போட்டுவிட்டு அமர்ந்திருந்தார் சென்னை ட்ரெக்கிங் கிளப்பின் நிறுவனர் பீட்டர் வேன்கேட். தமிழ்நாடும் தமிழ்நாட்டுக் காடுகளும் பரிச்சயமான அளவுக்கு, தமிழ் இன்னும் இவருக்குப் பழகவில்லை. ஆங்கிலத்திலேயே பேசினார்...

``நான் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவன். அழகான ஒரு கிராமம். சிறிய தோட்டம். அதில் அழகான ஒரு வீடு. இதுதான் நான் பிறந்து, வளர்ந்த சூழல். சிறிய வயதில் இருந்தே, இயற்கை சார்ந்த வாழ்க்கை எனக்கு வசமானது. 1998-ம் ஆண்டு, வேலைக்காக சென்னை வந்தேன். சென்னை, எனக்கு ரொம்ப சோம்பேறி நகரமாகப்பட்டது. எதிலும் ஒரு சிரத்தை இல்லாமல் இருந்தது. திரைப்படம், கடற்கரை, அதிகபட்சம் மகாபலிபுரம். இதுதான் சென்னை வாசிகளின் புற உலகம். ஆனால், என் கண்களுக்கு சென்னை வேறு மாதிரியான காட்சிகளைத் தந்தது. ஓரிரு மணி நேரப் பயணங்களில், வேறு உலகை... வேறு உணர்வை அளிக்கும் வல்லமை சென்னைக்கு இருக்கிறது. அதைத் தேடிப் போகத் தொடங்கினேன். நானாகப் போனது, நாமாகப் போக வேண்டும் என்ற எண்ணத்தில், 2008-ம் ஆண்டு உருவானதுதான் சென்னை ட்ரெக்கிங் கிளப்’’ என, தன் சுய அறிமுகத்தைச் சுருக்கமாகத் தந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்