சென்னைக்குள் ஒரு ஷூ நகரம்!

வெ.நீலகண்டன் - படங்கள்: மீ.நிவேதன்

பெரம்பூர், ராஜீவ் காந்தி பார்க்கை ஒட்டிப் பிரியும் சிறிய சாலையின் முடிவில் தொடங்குகிறது, மேட்டுப்பாளையம் அருந்ததியர் நகர். தெரு முழுவதும் சிதறிக்கிடக்கின்றன செருப்புச் சிதறல்கள். குருவிக்கூடு மாதிரி 2,000 வீடுகள். அவையே தொழிற் சாலையாகவும் இயங்குகின்றன. வாசல்கள்தோறும் பேஸ்ட் செய்யப் பட்ட செருப்புகளும் ஷூக்களும் உலரவைக்கப்பட்டுள்ளன. பெண்கள், தோலை அளவு எடுத்து வெட்டிக் கொண்டிருக்கிறார்கள். குடும்பம் குடும்பமாக அமர்ந்து வேலைசெய்கிறார்கள். தெருக்களில், வரிசையாக செருப்புக் கடைகள்.

``ஜோடுக்கு சீல கொட்டான்ட்ற...’’

``செப்புலுக்கு பேஸ்ட் எண்டிந்தா’’

ங்கு நோக்கினும் தெலுங்கே ஒலிக்கிறது. ஆந்திராவின், பழைமையான ஒரு குடியிருப்புக்குள் நிற்கும் உணர்வு நமக்கு.

தாசரி தெரு, பங்காரு தெரு, ரங்கப்பன் தெரு, போலேரியம்மன் தெரு, உப்பண்டி பாபு தெரு என, பெயரிலேயே தெலுங்கு மணக்கும் 14 தெருக்கள், 2 சந்துகள். இதுதான் மேட்டுப் பாளையம் அருந்ததியர் நகர். குறுகலான சாலைகள். ஒதுக்குப்புறமாக இருப்பதாலோ என்னவோ, நெடுங்காலமாக அரசின் பார்வையே படாத பகுதியாக இருக்கிறது. குப்பையும் சாக்கடையுமாக அழுக்காக இருக்கிறது அருந்ததியர் நகர்.

“எங்க தாத்தாவுக்கு அப்பா காலத்துல இருந்து இந்த மண்ணுலதான் வாழுறோம். தாய்மொழி தெலுங்கா இருந்தாலும், எங்களுக்கு எல்லாமே தமிழ்நாடுதான். எங்க எல்லாருக்குமே தொழில், செருப்பு தயாரிக்கிறதுதான். பெரிய பெரிய பிராண்டட் கம்பெனிங்க எல்லாம் எங்ககிட்ட ஆர்டர் கொடுத்து செஞ்சு வாங்கிட்டுப் போவாங்க. எங்க காலம் வரைக்கும் யாரும் பள்ளிக்கூடம் போனது இல்லை. அரசாங்கத்தை எதுக்காகவும் எதிர்பார்த்ததும் இல்லை. வீடே ஃபேக்டரி மாதிரிதான் இருக்கும். குடும்பம், குடும்பமா உக்காந்து, ஆளுக்கொரு வேலை செய்வோம். தலைமுறை தலைமுறையா எங்களை வாழவெச்ச இந்தத் தொழில், இந்த அஞ்சு வருஷத்துல தலைகீழா மாறிப்போச்சு. பெரும்பாலான மக்கள், செருப்புத் தொழிலை விட்டுட்டு, ஹவுஸ் கீப்பிங், மூட்டை தூக்குறதுன்னு வேற தொழிலை நாடிப் போயிட்டாங்க. இன்னும் கொஞ்ச வருஷத்துல அருந்ததியர் நகரத்துல பாரம்பர்யமா நடந்திட்டிருந்த செருப்புத் தொழிலே இல்லாமப் போகப்போகுது’’ என வருத்தம் தொனிக்கப் பேசுகிறார் ஏக்நாத். சி.பி.எம் கட்சியின் பகுதிச் செயலாளர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்