கிளிக்காவியம் - கவிதை

மனுஷ்ய புத்திரன், ஓவியங்கள்: செந்தில்

றவைகளை வளர்ப்பவர்கள்
மனப்பிறழ்வுகொண்டவர்கள்
அவர்கள் தங்கள் அன்பின் சுயநலத்தை
திரும்பத் திரும்ப சோதித்துக்கொள்கிறார்கள்
ஆறாத் துயரமொன்றை
திரும்பத் திரும்பத் தேடிப்போகிறார்கள்

நான் அப்படித்தான்
மூன்று கிளிகளை வளர்த்தேன்
கிளியின் அடர்பச்சை நிறங்கள்
பறக்கும் சிறிய புல்வெளிகள்போல
கிளர்ச்சியடையச் செய்பவை

முதல் கிளியை
நான் கொண்டுவந்தபோது
அதற்கு ‘தான்யா’ என்று பெயரிட்டேன்
தான்யா புத்திக்கூர்மைமிக்கவளாக இருந்தாள்
ஆனால் அவள் தனியாக இருக்க அஞ்சினாள்

நான் வெளியே செல்லும்போது
தொலைக்காட்சியில்
மனிதர்கள் பேசிக்கொண்டே இருக்கும்
சேனலை இயங்கச்செய்துவிட்டு
கதவை பூட்டிவிட்டுச் செல்வேன்
அங்கே மனிதர்கள் இருக்கிறார்கள்
என்று தான்யா உண்மையிலேயே
நம்பத் தொடங்கிவிட்டாள்
எனினும் அந்தப் பேச்சுக்கள்
அவள் சிந்தனாமுறையில்
சில மோசமான விளைவுகளை
ஏற்படுத்தக்கூடும் என்று அஞ்சினேன்

தான்யாவின் செவிகள் கூர்மையாக இருந்தன
தெருமுனையில்
என் கார் திரும்பும் சத்தம் கேட்கும்போதே
தான்யா படபடக்கத் தொடங்கிவிடுவாள்
கதவருகே வந்து நின்றுகொள்வாள்

தான்யா பெண் வாசனையை
மிகவும் நேசித்தாள்
என் சிநேகிதிகள் வரும்போது
அவர்கள் தோளில் ஏறிக்கொண்டு
அவர்கள் காது வளையங்களில்
ஊஞ்சலாட முயற்சிப்பதுபோல
அவற்றைக் கடிக்க முயற்சிப்பாள்
காது மடல்களில் கூடுதலுக்கு முந்தையை
முத்தத்தின் கிளர்ச்சிபோல
அவர்கள் கூசித் தவித்தார்கள்
அவர்களில் ஒருத்தி
நான்தான் கிளியை
அப்படிப் பழக்கிவைத்திருக்கிறேன்
என்று குற்றம்சாட்டினாள்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்