“ஸ்டாலின் என் அரசியல் வாரிசு... அழகிரியை நினைத்து ஏங்கவில்லை!”

மனம் திறக்கும் கருணாநிதிஎஸ்.முத்துகிருஷ்ணன், அ.சையது அபுதாஹிர்

ட்சிச் சக்கரம் இல்லாவிட்டாலும், அரசியல் சக்கரத்தை எப்போதும் தன் கையில் வைத்திருப்பவர் தி.மு.க தலைவர் மு.கருணாநிதி. தன்னைச் சுற்றியே தமிழ்நாட்டு அரசியல் சுழல வேண்டும் என்பதில், எப்போதும் கவனமாக இருப்பவர். அதைக் கைப்பற்றியும் வைத்திருப்பவர். வயது முதிர்வால் அவரது மேடை முழக்கங்கள் குறைந்துவிட்டன. ஆனாலும், தனது எண்ணங்களை எழுத்துக் கர்ஜனைகளால் கொண்டுசெலுத்துவதில் 93 வயதைத் தாண்டியும் சலிக்காமல் இருப்பவர்.

‘‘ஆனந்த விகடனின் 90-வது ஆண்டு சிறப்பிதழுக்காக உங்களைப் பேட்டி காண வந்துள்ளோம்!” என்றதும், ‘‘வாழ்த்துகள்” என உற்சாகமானவர் யோசிக்கிறார். ‘‘விகடனின் பொன்விழாவில் கவிதை பாடினேன். அதற்குள் 90 வந்துவிட்டதா?” எனக் கேட்டபடி, அப்போது அவர் பாடிய கவிதையின் சில வரிகளை நினைவூட்டுகிறார்...

பல்கிப் பெருகும் சொல்வளச் சுனைகளாய்க்
கல்கியின் கதைகளோ கருத்தைக் கவரும்!
கொள்கையிலே வேறுபாடு இருந்தாலும் - அதைச்
சொல்கையிலே பண்பாடு தேவை யென்று
செய்கையிலே காட்டியவன் விகடன்தானே?
பொய்கையிலும் நீர்ப்பாசி மிதப்பதுண்டு - அதுபோலச்
சில நேரம் குறையும் உண்டு - ஆனால் குற்றம் இல்லை

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்