“அப்பா, எனக்கு எப்பவுமே ஆச்சர்யம்தான்!”

ம.கா.செந்தில்குமார், படம்: கே.ராஜசேகரன்

‘‘ ‘எல்லாருக்கும் சொல்றதுக்கு முன்னாடி உன்கிட்ட சொல்லணும்னு தோணுச்சு. இப்படி ஒரு விருது அறிவிச்சிருக்காங்க’ - அன்று அதிகாலை அப்பாகிட்ட இருந்து இப்படி ஒரு வாட்ஸ்அப் மெசேஜ். ஒரு நடிகரா என்னை எப்பவுமே வியக்கவைப்பவரா, மரியாதைக்குரியவரா அப்பா இருக்கார். அவருக்குக் கிடைக்கும் இந்த மாதிரியான பாராட்டுக்கள், விருதுகள்... அவர் மீதான மரியாதையைப் பல மடங்காக்கி அவரை இன்னும் கொண்டாடத் தோணுது’’ - தன் அப்பா கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘செவாலியர்’ விருது கிடைத்தது பற்றி பெருமிதப்படுகிறார் மகள் ஸ்ருதிஹாசன்.  ‘சிங்கம்-3’ படப்பிடிப்பில் இருந்தவரைச் சந்தித்தேன்.

‘‘சின்ன வயசுல அப்பாவை ஷூட்டிங் ஸ்பாட் சூழல்ல பார்க்கும்போது, ஏதோ எல்லா நாளும் பர்த்டே பார்ட்டி நடக்கிற மாதிரியே தோணும். ஒவ்வொரு ஷூட்டிங் ஸ்பாட்டும் ஒரு மேஜிக்கல் பிளேஸ் மாதிரி இருக்கும். அந்த மேஜிக்கல் லேண்ட்ல அப்பா ஒரு மேஜிக்கல் ஹீரோ மாதிரி தெரிவார். அதில் இன்னும் பளீர்னு மனசுல இருக்கிறது ‘அபூர்வ சகோதரர்கள்’ ஸ்பாட்தான். அந்த செட் எனக்கு அவ்வளவு பிடிக்கும். பொமரேனியன் நாய்க்குட்டிகள், யானைகள்... ஏதோ ஒரு மாய உலகத்துக்குள் வந்துட்ட மாதிரி இருக்கும். அதை இப்ப நினைச்சுப்பார்த்தா டிஸ்னிலேண்ட்ல இருந்த ஃபீல். அப்ப ஒவ்வொரு கேரக்டருக்கும் அவரோட கடின உழைப்பு, அதோட சீரியஸ்னஸ் எதுவுமே எனக்குப் புரியாது. ஆனால், இப்ப வளர்ந்த பிறகு அப்பாவின் பயணத்தை நினைக்கும்போது எவ்வளவு முயற்சிகள், வெற்றிகள், தோல்விகள், கற்றுக்கொண்ட பாடங்கள்... ஆச்சர்யமா இருக்கு. யெஸ்... அப்பா, எனக்கு எப்பவுமே ஆச்சர்யம்தான்.’’

‘‘அப்பா இவ்வளவு விஷயங்கள் பண்றார், இவ்வளவு உழைக்கிறார்னு எந்த வயசுல உணர ஆரம்பிச்சீங்க?’’

‘‘ ‘குணா’ பட ஷூட்டிங் சமயம். நான் வளர்ந்து ஓரளவுக்கு சினிமா பிடிபட ஆரம்பிச்ச நாட்கள். ‘கண்மணி அன்போடு காதலன்...’ பாட்டு லொக்கேஷன். நேரில் போயிருந்தேன். அந்த லுக்குக்கு அவர் போட்டிருந்த மேக்கப், அவரின் நடிப்பு, எப்ப வேணும்னாலும் வழுக்கி விழலாம்கிற அந்த லொக்கேஷன்... அந்தச் சூழல்லயும் அவர் நடிப்பு தந்த ஆச்சர்யமும் வழுக்கி விழுந்துடப்போறார்ங்கிற பயமும்தான் சினிமா சாதாரண விஷயம் கிடையாதுனு புரியவெச்சது. அதுவும் ‘கலைஞன்’ பட சமயத்தில் அவருக்கு அடிபடும்போதுதான், சினிமாவில் இதுவும் ஒரு பகுதி. இது சீரியஸ் பிசினஸ்னு தெரிஞ்சது.’’

‘‘அப்ப அந்த பயம், ஆச்சர்யத்தை எல்லாம் அப்பாகிட்ட பகிர்ந்துப்பீங்களா?’’

‘‘பலமுறை சொல்லியிருக்கேன். ‘விஸ்வரூபம்’ டைம்லகூட, ‘எதுக்குப்பா சேர்ல இருந்து எல்லாம் பல்டி அடிக்கிறீங்க?’னு சொன்னேன். ஆனால், உண்மையான நடிகரா அவருக்கு அந்தத் தன்னம்பிக்கை இருக்கு. இதை எல்லாம் தாண்டி அவருக்கு சினிமாதான்... ஆமாம் கலைதான் வாழ்க்கை. அதுதான் உண்மை.’’

‘‘அப்பா பரபரப்பா நடிச்சுட்டிருந்த அந்த நாட்கள்ல நிச்சயமா நீங்க அவரை மிஸ் பண்ணியிருப்பீங்க. அந்தப் பிரிவை எப்ப உணர்ந்தீங்க?’’

‘‘ஸ்போர்ட்ஸ் டே, ஆண்டுவிழானு கூப்பிட்டா வர மாட்டார். இந்தச் சின்னச் சின்ன விஷயங்களைத் தவிர, பெரிய வருத்தம்னு எதுவும் கிடையாது. அவருக்கு சினிமா எவ்வளவு முக்கியம்னு புரிஞ்சுடுச்சு. அதன்பிறகு, ‘ஐயய்யோ, மத்தவங்களோட அப்பா வந்திருக்காங்களே... நம் அப்பா வரலையே!’னு ஃபீல் பண்ணினது இல்லை. ஒவ்வொரு பட ஷூட்டிங் முடிந்தும் அப்பாவை திரையில் பார்க்கும்போது ரொம்பப் பெருமையா இருக்கும். ‘என்கூட அவ்வளவு நாள் இல்லாட்டியும் பரவாயில்லை. எவ்வளவு விஷயங்களை க்ரியேட் பண்ணியிருக்கார்’னு பெருமைப்படுவேன். ஆனால், நேரம் கிடைச்சா எப்பவுமே எங்ககூடதான் இருப்பார். ரோலர் ஸ்கேட்டிங், கிரிக்கெட், சினிமா பார்க்க, ரெஸ்டாரன்ட்னு எங்ககூட எங்களுக்குப் பிடிச்ச மாதிரி நேரம் செலவழிப்பார்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்