மீண்டும் ஒரு காதல் கதை - சினிமா விமர்சனம்

லையாள சூப்பர் ஹிட்டான `தட்டத்தின் மறையத்து' படத்தின் ரீமேக்கே `மீண்டும் ஒரு காதல் கதை'.

மொபைல் போனுக்குகூட அனுமதி இல்லாத, பாரம்பர்ய முஸ்லிம் குடும்பப் பெண் ஆயிஷா. அவளைப் பார்த்ததும் வினோத்துக்கு காதல். பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு வினோத் தன் காதலைச் சொல்ல, ஆயிஷா தரப்பில் நோ சிக்னல். போலீஸின் பேராதரவுடன் வினோத் மீண்டும் முயற்சிக்க, சம்மதம் சொல்கிறாள் ஆயிஷா. அவள் வீட்டில் என்ன சொன்னார்கள் என்பது, தமிழ் சினிமா கோடி முறை பார்த்த க்ளைமாக்ஸ்.

பென்சில் ஓவியங்கள் அசைந்தாடும் அந்த அழகிய டைட்டில் கார்டிலேயே ஈர்க்கிறார் இயக்குநர் மித்ரன் ஜவஹர். ஆனால், அதன் பிறகு எந்த மாற்றமும் இல்லாத ரீமேக் வேலைக்குத் திரும்பிவிடுகிறார். முதல் படம் என்னும்போது வால்டர் பிலிப்ஸின் வரவு, நல்வரவு. அவ்வபோது முகத்தில் எட்டிப்பார்க்கும் ஓவர் ஆக்ட்டிங் தவிர்த்து எல்லாம் கச்சிதம். கதைகளை சரியாகத் தேர்வுசெய்தால், இன்னொரு சாக்லேட் பாய் ரெடி. 2012-ம் ஆண்டில் வந்த `தட்டத்தின் மறையத்து' படத்தின் நாயகி இஷா தல்வாரேதான் இதிலும். ஆனால், 2016-ம் ஆண்டு இஷா முகத்தில் இருந்த அந்த இளமை மிஸ்ஸிங்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்