தொழில்நுட்பத்தின் வழியே கற்றல்!

ற்றல் என்பது, நீண்ட நெடிய ஒரு தொடர்நிகழ்வு என்பதை நாம் மறந்துவிட்டோம். கற்றலில் கேளிக்கையும் கொண்டாட்டமும் நிறைந்திருக்க வேண்டும் என்பதையும் அறவே ஒழித்துவிட்டோம். நம் பள்ளிகளில் பாடங்கள் போதிக்கப்படுவது இல்லை; திணிக்கப்படுகின்றன. இப்படி ஒரு சூழலில், குழந்தைகளால் எப்படி படைப்பாற்றலுடன் இயங்க முடியும்?

தொழில்நுட்பத்தின் உதவியோடு இதை எப்படி மாற்றி அமைப்பது? தொழில்நுட்பம் உச்சத்தில் இருக்கும் காலகட்டத்தில் அதைக் கற்றலுக்கான கருவியாக எப்படி மாற்றப்போகிறோம்?

‘E for Elephant' எனச் சொல்லும்போதே, டேபிளில் ஒரு யானை வந்து நின்றால், குழந்தைகள் அசந்துபோகாதா? அதன் பிளிறலைக் கேட்டுக்கொண்டே படிக்க முடிந்தால் எப்படி இருக்கும்? ஒரு ஸ்மார்ட்போன் உதவியோடு இன்று இதைச் செய்துவிட முடியும். ஆகுமென்டட் ரியாலிட்டி. நம் செல்போனில் ‘Animals 4D+' என்ற செயலியைத் தரவிறக்கம் செய்துகொண்டால் போதும்.

நூல்களுக்குள் விலங்குகள் 4D-யில் காகிதத்தில் இருந்து எழுந்து ஓடும், பறக்கும், மிதக்கும், சத்தம் எழுப்பும்.

இது மாதிரியான புதிய பாணி கற்பித்தல், குழந்தைகள் மத்தியில் ஆர்வத்தையும் படைப்பாற்றலையும் அதிகமாக்குகிறது.

வளர்ந்துவரும் புதிய தொழில்நுட்பங்களின் வழியே, குழந்தைகளின் கற்றலை மட்டும் அல்ல... நம் வாழ்க்கைமுறையை, நம் அன்றாடப் பிரச்னைகளை உங்களால் மாற்றி அமைக்க முடியுமா அல்லது எப்படி மாற்றி அமைக்கலாம் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? அதற்காகவே விகடன் அமைத்துக்கொடுக்கும் வாய்ப்பு `விகடன் ஹேக்கத்தான்'.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்