ஜென் Z - பேப்பர் மேன்!

வெ.நீலகண்டன், படங்கள்: ப.சரவணகுமார்

“இந்தியா முழுக்க ஒவ்வொரு வருஷமும் 43 மில்லியன் டன் கழிவுகளை வீசி எறியுறோம். இதன் மதிப்பு சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய். இதை இலக்கு வெச்சு paperman.in மெள்ள மெள்ள வளர்ந்துட்டிருக்கு” - உற்சாகமாகப் பேசுகிறார் இளைஞர் மேத்யூ ஜோஸ். வித்தியாசமான ஒரு ஐடியா, பல பேருக்கு உதவியாக மாறிய கதைக்கு, பேப்பர்மன் ஒரு நல்ல உதாரணம்.

மேத்யூக்கு பூர்வீகம் கேரளாவின் எர்ணாகுளம். இவர்,  மூலம் செய்யும் பணி அசாதாரணமானது. வீடுகள், தொழிற்சாலைகள், பள்ளிகள்... என 3,200 இடங்களில் இந்த நிறுவனத்தின் பைகள் வைக்கப் பட்டுள்ளன.  கழிவுப்பொருட்கள் அனைத்தையும் இந்தப் பைகளில் சேகரிப்பார்கள். பைகள் நிரம்பியதும், இணையதளம் அல்லது, பேப்பர் மேன் நிறுவனத்தின் டோல் ஃப்ரீ எண்ணில் தகவல் தெரிவிக்கப்படும்.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் 270 காயலான் கடைக்காரர் களை ஒருங்கிணைத்து, வாடிக்கையாளர் களைக் கனிவோடு அணுகுவதற்கான பயிற்சியும், ஐ.டி கார்டும் கொடுத்து பேப்பர் மேன் இணையதளத்தோடு இணைத்திருக்கிறார் மேத்யூ. எந்தப் பகுதியில் இருந்து தகவல் வருகிறதோ, அங்கு இருக்கும் காயலான் கடைக்காரர் களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் செய்தி அனுப்பப்படும். அவர் உடனே, அந்த வீட்டுக்குச் சென்று கழிவுப்பொருட்களை எடைபோட்டு எடுத்துக்கொண்டு அதற்கு உரிய ரசீதை அவர்களிடம் தருவார். விரும்பினால் கழிவுப்பொருட்களைத் தருவோர் பணம் பெற்றுக்கொள்ளலாம். இல்லை என்றால், தொகை பேப்பர் மேன் நிறுவனம் மூலம், குழந்தைக் கல்வி, இளைஞர் மேம்பாடு, முதியோர் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில் ஆக்கபூர்வமாகச் செயல்படும் 38 தொண்டு நிறுவனங்களில், ஏதேனும் ஒன்றுக்குப் போய் சேரும். யாருக்கு இந்தப் பணம் போய்ச் சேரவேண்டும் என்பதை, கழிவுப்பொருட்களைத் தருபவரே முடிவு செய்யலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்