மென் புன்னகை - கவிதை

பூமா ஈஸ்வரமூர்த்தி, ஓவியம்: ஸ்யாம்

ண் நிறைந்த
மரங்கள் செடிகள் கொடிகள்
நடுவே செவ்வகத்தில் ஒரு வீடு
வாடகைக்கு அமர்ந்த எங்கள் வீடு
நான் அம்மா அப்பா என் முதல் தங்கை
எங்களோடு கறுப்பில் ஒரு நாய்

நாலு அல்லது நாலரை வயது எனக்கு
நாலு பக்கங்களிலும் நீள நீள அறைகள்
நடுவில் பெரிய முற்றம்
வீட்டைச் சுற்றி சிமென்ட் நடைபாதை
எதிரே அடர்வான செடி கொடிகள்
கருநீலப் பூக்கள், சாட்டை அவரை மற்றும் புடல்
இரவு நேரத்தில் பாம்புகள் போல் பயமுறுத்தும்

வெளியே வைத்து அம்மா என்னைக்
குளிக்கவைப்பது வழக்கம்
செடி கொடிகளுக்கும் தண்ணீர் போய்ச் சேரும்
எப்போதாவது விமானம் வீட்டின் மேல்
தாழப் பறந்துபோவதுண்டு
அப்போதெல்லாம்
பாதிக் குளியலிலேயே உடலில் துணியில்லாமல்
கைகளை உயர்த்திக்கொண்டே
விமானம் பிடிக்க ஓடுவேனாம்
அம்மா
அடிக்கடி நினைவுகூரும் காட்சியிது
கடைசித் தங்கை உமா சிரிக்கிறாள்
``என்னண்ணே இது, துணியில்லாம
எரோப்பிளேன்
பிடிக்க ஓடியிருக்க. ச்சை... வெக்கம்!”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்