வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

twitter.com/palanikannan04: கல்யாணத்துக்கு நாலு நாளைக்கு முன்னாடி, செல்போன் நம்பரை மாத்துறவன் புத்திசாலி; செல்போனையே மாத்துறவன் அதிபுத்திசாலி!

twitter.com/BoopatyMurugesh: கச்சத் தீவை வாங்கி, பக்கத்து நாட்டுக்குத் தர முடிந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால், காவிரி நீரை வாங்கி பக்கத்து ஸ்டேட்டுக்குத் தர முடியலை!

twitter.com/Aruns212: நாம கஷ்டத்தில் `புதிய பறவை' சரோஜா தேவி போல `கோபால்... கோபால்...'னு சாமிகிட்ட கதறினாலும், அவருக்கு வடிவேலுவோட `கோவாலு... கோவாலு...' மாதிரிதான் கேட்கும்போல.

twitter.com/kunnathurarumug: ஸ்கூட்டி இருக்கிற விட்டுல பொண்ணு இருக்கும்னு நினைக்கிறது தப்பு ப்ரோ. இப்ப எல்லாம் தாத்தாவும் ஸ்கூட்டிதான் ஓட்டுறாங்க!

twitter.com/SettuOfficial: புதிதாக ஆம்புலன்ஸ் வாங்கி பூஜை போடுகிறார் ஒருவர். கடவுளிடம் என்ன வேண்டிக் கொள்வார் என்ற ஆர்வம் எனக்கு???!!!!

twitter.com/BoopatyMurugesh: ஜல்லிக்கட்டை தடை பண்ணிட்டு கிரிக்கெட் டீமுக்கு `காரைக்குடி காளை'னு பெயர் வெச்சா, உட்கார்ந்து பார்க்கிற அளவுக்கா தமிழர்கள் சொரணை இழந்துட்டோம்? :-)

twitter.com/Kannan_Twitz: பத்து நிமிஷம் தனியா போய் நின்னுட்டு போன் பேசிட்டு வந்தா, `யார்கிட்ட கடலை போட்டே?'னு கேட்கிறதை எப்போ விடுறாங்களோ, அப்போதான் இந்தியா வல்லரசு ஆகும்.

twitter.com/arattaigirl: பொட்டேட்டோ ரைஸ். மிச்சமான உருளைக்கிழங்கு பொரியல்ல சோத்தைப் பிரட்டி சாப்பிட்டாச்சு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்