அறம் பொருள் இன்பம் - 15

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
வ.நாகப்பன்

ன்லைன், அரக்கனா... அற்புதமா?

``ஆன்லைன்னாலே செலவுதாம்பா! ஃப்ளிப்கார்ட், அமேஸான், ஸ்நாப் டீல், மிந்த்ரா-னு நம்ம பர்ஸைக் காலி பண்றதுக்குன்னே வரிசை கட்டி நிக்கிறாங்க – ” என மகன் ஷ்யாமைப் பார்த்து அலுத்துக்கொண்டார் மகாதேவன்.

“கூல் டாட்” என்றாள் கல்லூரிக்குச் செல்லும் மகள் ஸ்வாதி.

அதுவும் ஓரளவுக்கு உண்மைதானே!

சுவிட்ச் ஆன் செய்து, கம்ப்யூட்டரில் ஷாப்பிங் செய்யக்கூட கொஞ்சம் தாமதம் ஆகலாம் என்பதால், இப்போது ஸ்மார்ட்போன் மூலமாகவும் ஷாப்பிங் செய்வது எளிதாக இருக்கிறது.

`சேம்டே டெலிவரி' என அதே நாளில் டெலிவரி செய்ய, கூடுதல் கட்டணம் வேறு தனியாக வசூலிப்பார்கள்.

அதிலும் கிரெடிட் கார்டை லிங்க் செஞ்சுட்டா போதும், வாங்கிக் குவிக்கலாம். மாசக் கடைசியில் பில் வரும்போதுதான் தெரியும் தலைவலி எல்லாம்!

கவலை வேண்டாம். அதுக்கும் இப்போ வழி வெச்சிருக்காங்க. `இப்பவே முழுசா கொடுக்கணும்னு இல்லை, ஈஸி இன்ஸ்டால்மென்ட்ல பணத்தைத் திருப்பிக் கொடுத்தா போதும்'னு ஆசை காட்டுவாங்க.

தலைகீழாக நின்னாவது, நமக்குத் தேவையே இல்லாத பொருளைக்கூட பல சமயங்களில் நம்மை வாங்கவைப்பதுதான் ஆன்லைன் என்பதில் துளியும் சந்தேகம் வேண்டாம்.

ஆனால், எந்த ஒரு டெக்னாலஜி வளர்ச்சிக்கும் இரு பக்கங்கள் உண்டு என்பதை மறக்கக் கூடாது. கூரான கத்திக்கும் இருபக்கங்கள் உண்டு; நாணயத்துக்கும் இருபக்கங்கள் உண்டு. அதன் எந்தப் பக்கத்தைப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்து அதன் பயன்பாடு மாறுபடும்.

பொதுவா, இந்த மாதிரி கமென்ட்டுக்கு பதில் சொல்லாமல் செல்லும் ஷ்யாம், ஒரு நிமிடம் நின்று நிதானித்தான். “டாட், டு யூ ஹாவ் எ மினிட்?” என்றான் ஷ்யாம்.

கல்லூரி முடித்து வேலைக்குச் சேர்ந்திருக்கும் ஷ்யாம், தேவை இல்லாமல் பேச மாட்டான். அப்படிப் பேசினால், டீட்டெயிலாகப் பேசுவான்.

` `ஆன்லைன்ல வாங்கிறதுனால, எவ்வளவு எல்லாம் மிச்சம் செய்திருக்கிறேன் பார்' எனச் சொல்லப்போறான். தெரிஞ்சதுதானே! நாம சொல்றதை எல்லாம் இந்தத் தலைமுறை என்னைக்குக் கேட்டிருக்கு? எப்பவும் எதிர்ப் பேச்சுத்தான். இன்னைக்கு இவனுக்கு லீவு வேற. நல்லா மாட்டிக்கிட்டோம்’ என நினைத்துக் கொண்டு, “சொல்லு” என்றார் மகாதேவன்.
 
``நான் வேலைக்குச் சேர்ந்து கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகப் போகுது. இன்றைய தேதியில் என் மொத்த சேமிப்பு எவ்வளவு தெரியுமா?” என்றான்.

அவருக்கு ஓரளவுக்குத் தெரியும். அவரிடம் சொல்லாமல் எதுவும் செய்ய மாட்டான் ஷ்யாம் – அதுவும் பண விஷயத்தில்.

எல்லா செலவுகளையும் அவர் பார்த்துக்கொள்வதால், அவனுடைய சில்லறைச் செலவுகள் போக மாதம் 10,000 ரூபாய்க்குக் குறையாமல் சேமித்து வருகிறான். அதனால், ``குத்துமதிப்பாக ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் இருக்கலாம்'' என்றார்.

``அந்தப் பணத்தை என்ன மாதிரியான முதலீட்ல போட்டு வெச்சிருக்கேன் தெரியுமா?” என்றான்.

ஏதோ அவன் சொன்னதாக நினைவு. இப்போ சுத்தமா மறந்துபோச்சு. மைய்யமா தலையை ஆட்டினார்.

“அது இப்போ எவ்வளவா பெருகியிருக்குன்னு தெரியுமா?” என்றான்.

“இதெல்லாம் நான் எப்படிப்பா ஞாபகம் வெச்சுக்கிறது? எழுதிக்கூட வெச்சுக்கலையே” என்றார்.

“டோன்ட் வொர்ரி டாட். அதெல்லாம் தேவையே இல்லை. எல்லாத்தையும் ஒண்ணா கூட்டிக் கழிச்சு நமக்குச் சொல்ல ஒருத்தர் இருக்கார்” என்றான் ஷ்யாம்.

“யாரு... நம்ம ஆடிட்டரா? இப்பெல்லாம் அவரு ரொம்ப பிஸியாச்சே! ரிட்டர்ன் ஃபைல் பண்ணவே அவருக்கு நேரம் இல்லை. நீ போட்டிருக்கிற இந்தச் சின்னத் தொகையை கணக்குவெச்சு சொல்றதுக்கு எல்லாம் ஒரு ஆளா... கட்டுப்படியாகுமா?'' என்றார்.

``சம்பளம் கொடுக்கிறதா யார் சொன்னது? பைசா சம்பளம் இல்லை. ஒரு கட்டணமும் கிடையாது. ஒருத்தர் இல்லை, பலர் இருக்காங்க. ஆனா இணையத்துல!”

``உதாரணமா, moneycontrol.com இணைய தளத்தில் நம்ம முதலீட்டை ஒட்டுமொத்தமா நிர்வகிக்கலாம். இதுக்காகவே தனியா நம்ம பேர்ல ஒரு கணக்கு திறக்கலாம் முற்றிலும் இலவசமா!''

``இது எப்படி ஷ்யாம் வேலைசெய்யுது?”

``நம்முடைய பலதரப்பட்ட முதலீடுகளை இதில் பதிவுசெய்து வெச்சுக்கலாம். ஏதாவது புதுத் திட்டங்கள்ல அல்லது அதே திட்டங்கள்ல முதலீடு செய்யும்போது அவற்றையும் இதில் பதிவுசெய்து வெச்சுக்கலாம். அந்தத் திட்டம்/திட்டங்கள் முதிர்வடைஞ்சு பணத்தை வெளியே எடுக்கும்போது, அதையும் பதிவுசெஞ்சு வெச்சுக்கலாம். இப்படியே ஏதாவது திட்டங்கள்ல பணத்தைப் போடும்போதும் சரி, திரும்ப வெளியே எடுக்கும்போதும் சரி, எல்லாத்தையும் இந்த இணையதளத்தில் பதிவுசெஞ்சு வெச்சுக்கிட்டே வரலாம்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்