திரைத்தொண்டர் - 23

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
அமரர் பஞ்சு அருணாசலம்

`பஞ்சுவின் படங்களில் ‘எங்கேயோ கேட்டகுரல்’ முக்கியமான படம்' - அந்தப் படம் வந்த 30 ஆண்டுகளுக்குப் பிறகும் இப்படிப் பாராட்டும்போது சந்தோஷமாக உணர்வேன். அந்தப் படத்துக்கு அப்போதே நிறைய விருதுகள் கிடைத்தன. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் அன்று தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தபோது, அந்த வருடத்தின் சிறந்த படம், சிறந்த கதை-வசனகர்த்தா, சிறந்த தயாரிப்பு உள்ளிட்ட விருதுகளுக்கு எங்களைத் தேர்வுசெய்தார். ஆனால், அந்த விருது கொடுக்கும் சமயத்தில் நான் ‘ஜப்பானில் கல்யாணராமன்’ படப்பிடிப்புக்காக ஜப்பான் சென்றிருந்தேன். அந்த விருதை என் சார்பில் என் மகன் சுப்புதான் வாங்கிவந்தான். அந்த நாட்களை நினைக்கும்போது, ‘நாமும் ஏதோ செய்திருக்கிறோம்’ என்ற மகிழ்வைத் தருகின்றன.

தற்கு இடையில் ஏவி.எம் சரவணன் சார் ‘சுட்டாலுன்னாரு ஜாக்ரதா’ என்ற ஒரு தெலுங்குப் படத்தைப் பார்த்து, அது பிடித்துப்போய் அதன் ரைட்ஸ் வாங்கிவந்தார். அது கிருஷ்ணா தயாரித்து, நடித்த படம். தெலுங்கில் அந்தப் படத்தில் நடித்த ஸ்ரீதேவியையே தமிழுக்கும் புக்செய்தனர். ‘பஞ்சு சார், ரஜினி சாரை வைத்து பண்றதுக்காக ஒரு படம் வாங்கியிருக்கேன். நீங்க அதைப் பார்த்துட்டு தமிழுக்குத் தகுந்த மாதிரி எழுதிக்கொடுத்துடுங்க’ என்றார் சரவணன் சார். அந்தப் படத்தைப் பார்த்தேன். எனக்கும் பிடித்திருந்தது. அந்தக் கதைக்கு, தமிழுக்குத் தகுந்தவாறு ட்ரீட்மென்ட் செய்தேன். அந்தப் படம்தான் ‘போக்கிரி ராஜா’.

திரைக்கதையின் போக்கு, கதாபாத்திரங்களின் குணாதிசயங்களை வைத்து ஒவ்வொரு கேரக்டரிலும் யாரை நடிக்கவைக்கலாம் என்பதையும் நானே சொல்வேன். அப்படி ‘இந்த வில்லன் கேரக்டருக்கு யாரை நடிக்கவைக்கலாம்’ என யோசனை. ‘ஹீரோவா நடிச்சுட்டு இருந்த ஜெய்சங்கர் சாரை ‘முரட்டுக்காளை’யில் வில்லனாக்கினோம். அது புதுமையா பேசப்பட்டது; மக்களும் ரசிச்சாங்க. பிறகு, அவர் பல படங்களில் வில்லனா நடிக்க ஆரம்பித்தார். அந்த மாதிரி இதில் யாரை கமிட் பண்ணலாம்...’ என யோசித்தபோது, நடிகர் முத்துராமன் சாரின் நினைவு வந்தது.
அது, முத்துராமன் சாருக்கு ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புகள் குறைந்திருந்த நேரம். குணச்சித்திர வேடங்களில் நடிக்கலாம். ஆனால், ஏனோ தெரியவில்லை சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார். ‘அந்தச் சிறந்த நடிகரை மீண்டும் சினிமாவுக்குத் திருப்பிக் கொடுக்கணும்’ என்று எனக்கு ஆசை. விஷயத்தை சரவணன் சாரிடம் சொன்னேன். ‘அவர் ஒப்புக்கிட்டா, எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. நீங்களே பேசுங்களேன்’ என்றார். நானே போய் முத்துராமன் சாரிடம் பேசினேன். அவர் அமைதியாக, அழகாக, அளவாகப் பேசக்கூடியவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்