ஜென் Z - தமிழகத்தின் அயர்ன்மேன்!

சிபி, படம்: மீ.நிவேதன்

தோல்வி... தோல்வி... எனத் தோல்விகளால் மட்டுமே துரத்தி அடிக்கப்பட்டவரின் முதல் வெற்றியே... கின்னஸ் சாதனை!

டேனியல் சூர்யா. கடந்த வாரம் சென்னை ஸ்பென்சர் பிளாஸாவில் தொடர்ந்து, 100 மணி நேரத்துக்கு மேல் நின்றுகொண்டே 7,000 துணிகளுக்கும் அதிகமாக `அயர்ன்’ மாரத்தான் செய்து இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.

``ஒண்ணுமே இல்லாத பய நான். தோத்தாங்குளினு சொல்வாங்கல... அப்படி.  வெறும் உடம்பை மட்டும் சுமந்துட்டு உலகத்துக்கு பாரமாத்தான் இருக்கேன்னு நினைப்பேன். சின்ன வயசுலயே அப்பா இறந்துட்டார். ரொம்ப ஏழ்மையான குடும்பம். பத்தாவது முடிச்சதும், வேலைக்குப் போகவேண்டிய சூழல். மேஸ்திரி வேலை, துணி விற்கிறதுனு சில வேலைகள் செஞ்சேன்.

அப்பதான் துணிகளை அயர்ன் பண்ணும் சிலரைச் சந்திச்சேன். அயர்ன் தொழிலில், ஒரு நாளைக்குக் குறைந்தது 1,000 ரூபாய் வரை சம்பாதிக் கலாம்னு சொன்னாங்க. வழிப்போக்கனுக்கு எங்க ஒதுங்க இடம் கிடைச்சாலும், ஒதுங்குற மாதிரி... நானும் இனி இதுதான் நம்ம வேலைனு ஒரு லாண்டரி கம்பெனியில வேலைக்குச் சேர்ந்துட்டேன். 50 துணிகளைக் கொடுத்தாலும், சும்மா சட்டு சட்டுனு பக்காவா அயர்ன் செஞ்சுடுவேன். கம்பெனியில் `குட் பாய்’னு பேர் வாங்கினேன்.

வேலைக்காக சென்னையில இருந்து பெங்களூரு போனேன். அங்கதான் ஷாலினியைச் சந்திச்சேன். ரொம்ப அழகா இருப்பாங்க. எங்க ரெண்டு பேருக்கும் அப்படி ஒரு லவ். 2001-ல திருமணம் செஞ்சுக்கிட்டோம். கின்னஸ் சாதனை மாதிரி ஏதாவது பெரிய சாதனை செய்யணும்னு அவங்ககிட்ட சொல்லிட்டே இருப்பேன். `அதை அயர்னிங்லயே பண்ணு'னு ஷாலினி உற்சாகப்படுத்தினாங்க. ஆனால், எங்கிருந்து ஆரம்பிக்கணும்னு தெரியலை.

பத்துக்கும் மேற்பட்ட கின்னஸ் சாதனைகள் செஞ்ச சுரேஷ் ஜோச்சினைப் போய்ப் பார்த்தேன். `சூப்பர்... நீங்க நிச்சயம் அயர்ன்ல சாதனை செய்யலாம். ஏதாவது பெரிய ஷாப்பிங் மாலில் முயற்சி பண்ணுங்க. இதுக்கு முன்னாடி அயர்ன்ல சாதனை பண்ணவங்க எல்லாரும் ஏதாவது ஒரு மாலில்தான் பண்ணியிருக்காங்க. எனக்கு ஸ்பென்சர் பிளாசால லிங்க் இருக்கு. நான் உங்களுக்கு சீக்கிரம் சொல்றேன்’னு சொல்லிட்டு, ஃபாரினுக்குப் பறந்துட்டார். `ஏதாவது ஒரு நல்லது நடக்காதா?’னு ஏக்கமா இருந்தது. அந்தச் சமயத்துல என் வாழ்க்கையில இன்னோர் இடி இறங்கியது. என் குழந்தை மஞ்சள் காமாலையில் இறந்துபோய்டுச்சு.

குழந்தை இறந்ததுக்கு அப்புறம் என் காதல் மனைவிக்கும் அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போனது. 28 வயசுலேயே ரொம்ப முடியாமப் போய்ட்டாங்க. திடீர் திடீர்னு ஜுரம் வரும். ஹாஸ்பிட்டல்ல சேர்த்தோம். நல்லா பேசிட்டுத்தான் இருந்தாங்க. என்ன ஆச்சுன்னே தெரியலை. மூணு நாளில் இறந்துட்டாங்க. யாருமே இல்லாத உலகத்துல தனி ஆளா இருப்பதுபோல உணர்ந்தேன்.

`செத்துடலாமா?’னுகூட யோசிச்சேன். ஆனால் ஒருநாள் ஏதோ ஞானோதயம் கிடைச்ச மாதிரி எனக்குத்தான் யாரும் இல்லை. யாருக்காகவாவது நான் உபயோகமா இருக்கலாம்னு தோணிச்சு.

நான் தினமும் லோக்கல் ட்ரெயின்லதான் வேலைக்குப் போவேன். அங்கே கண் தெரியாதவங்க நிறையப் பேர் பிச்சை எடுப்பாங்க. அங்க ஒரு பொண்ணுகூடப் பேசினேன்; பழகினேன். புது உறவு கிடைச்ச மாதிரி இருந்தது. அவங்களுக்குப் பார்வை கிடைக்கணும்னு நினைச்சேன். ஆனால், என்னால் என்ன பண்ண முடியும்? எனக்குத் தெரிஞ்சது அயர்ன். அதுல ஏதாவது ஒரு சாதனை செய்தால் எல்லோரும் திரும்பிப்பார்ப்பாங்க. அதன் மூலமாக கண்தானம் பற்றி சொல்லலாம்னு, பழைய ஐடியாவைக் கையில் எடுத்தேன். அயர்ன் செய்த சாதனையாளர்கள் லிஸ்ட் தேடினேன். அப்ப இன்னோர் அடி விழுந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்