ஆட்டம் - கவிதை

வலங்கைமான் நூர்தீன்

ள்ளிரவை நெருங்கும் இருள்.
லேசான தூறலில்
சாலை நசநசத்துக்கொண்டிருந்தது.
பாலத்துக்கு அருகில்
தரிசு நிலக் குடிசையொன்றில்
அறிந்தவர்களுக்கு மட்டும் சாராயக்கடை.

மடியில் கனக்கும் காசுகளோடு
தலையில் முண்டாசை இறுக்கிக்கொண்டு
அரிக்கேன் வெளிச்சத் திசை நோக்கி நடப்பவன்
கழுத்து வரை
ரொப்பிவிட்டுத்தான் வருவான்.

பாகன் திரும்பும்வரை மணியோசையுடன்
பசியில் ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கும்
அவனுக்கு வசூலித்துக்கொடுத்த யானை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்