கோடானு கோடி நன்றி - கவிதை

எம்.ஸ்டாலின் சரவணன்

னக்கு தினமும் கனவு வருகிறது என்றேன்.
உனக்கும் அப்படியே என்றாய்.
ஒருநாள் கடவுள் மறுநாள் சாத்தான்
முறைவைத்து வந்துபோவதாக ரகசியம் உடைத்தேன்.
உனக்கும் அதே என்றாய்.
ஒரு சுபயோக தினத்தில்
தேவர்களும் அரக்கர்களும் கூடி
ஓலை எழுதி பொன்பூட்டிட்டேன் உனக்கு.
நாளதிலிருந்து கனவு வருவதில்லை.
மாறாக நீ சாத்தானாகும் நாளில்
நான் கடவுளாவேன்.
எனக்குக் கோரப்பற்கள் நீளும்போது
உனக்கு முதுகில் இறக்கை முளைக்கும்.
இந்தப் பகடை ஆட்டத்தில்
இரு தாயங்கள் விழ
அதற்கு ஒரு கடவுள் ஒரு சாத்தான்
பெயரிட்டு
நம் கண்விழி பதிந்து கைரேகை உருட்டி
அரசாங்கம் தந்த
ஆதார் கார்டும் பெற்று மகிழ்ந்து
நன்றிக் கடன்பட்டோம் வாழ்க்கைக்கு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்