"ஜெயலலிதாவிடம் பயம் தெரிகிறது!”

பொளேர்... பளீர் ஸ்டாலின்எஸ்.முத்துகிருஷ்ணன், படங்கள்: ஆ.முத்துக்குமார், கே.சக்திவேல்

```89 எம்.எல்.ஏ-க்களைப் பெற்றுவிட்டோம். எதிர்க்கட்சி வரிசையில் 98 பேர் இருக்கப்போகிறோம்' என்ற இறுமாப்புடன் நாங்கள் இந்தச் சட்டமன்றத்துக்குள் போகவில்லை. ‘நாங்கள் ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்’ என்று முதல் நாளிலேயே தி.மு.க சார்பில் உறுதி அளித்தேன். மக்கள் எதிர்பார்க்கும் விஷயங்களைச் சொல்லலாம் என நினைத்தோம். ஜெயலலிதாவும் பக்குவம் பெற்றிருப்பார் என நம்பினோம். ஆனால், அ.தி.மு.க உறுப்பினர்களும் அமைச்சர்களும் எங்களைச் செயல்பட அனுமதிக்கவில்லை. ஏன்... ஜெயலலிதாவே அனுமதிக்கவில்லை. இந்த அம்மா சபையில்... சும்மா சபையில் எங்களால் மட்டும் அல்ல, எந்த எதிர்க்கட்சியினாலும் திருப்திகரமாகச் செயல்பட முடியாது!” - `சட்டசபையில் தி.மு.க-வின் செயல்பாடு!' எனக் கேட்டதுமே வெடிக்க ஆரம்பித்துவிட்டார் மு.க.ஸ்டாலின். வெளிநடப்பு, சஸ்பெண்ட், போட்டி சட்டசபை... என, கடந்த ஒரு மாத காலமாக சட்டமன்றத்தைப் பரபரப்பாக்கிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை, ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்தித்தேன்.

‘‘சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக தி.மு.க-வால் திருப்திகரமாகச் செயல்பட முடிந்ததா?”

‘‘எப்படிச் செயல்பட முடியும்... எங்கே செயல்படவிட்டார்கள்? அ.தி.மு.க-வுக்கு, குறிப்பாக ஜெயலலிதாவுக்கு அந்தச் சகிப்புத்தன்மை கொஞ்சமாவது இருக்கிறதா? அல்லது ஜெயலலிதாதான் திருந்திவிடுவார் என எதிர்பார்க்க முடியுமா? கருத்துச் சுதந்திரத்துக்கும் சகிப்புத்தன்மைக்கும் கதவு அடைக்கப்பட்ட அவையில், எதிர்க்கட்சித் தலைவரின் குரல்வளையே நெரிக்கப்படுகிறது. எதையும் சொல்லவிடுவது இல்லை. அப்படியே சொன்னாலும் அதை நீக்குகிறார்கள். அ.தி.மு.க தரப்பு சொல்லும் குற்றச்சாட்டு, அவைக்குறிப்பில் இருக்கிறது. அதற்கு நான் சொல்லும் பதில் அவைக்குறிப்பில் இருக்காது. சபாநாயகர், ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டார். இப்படிப்பட்ட அவையில், எங்கள் கருத்தை எப்படி முழுமையாகப் பதிவுசெய்ய முடியும்? எங்களுக்கு போதுமான நேரம் கொடுக்கப்படவே இல்லை.”

‘‘ஆனால், `சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிக நேரம் பேசியிருக்கிறார்கள்' என சபாநாயகர் சொல்லி இருக்கிறாரே?''

 ``இப்போது, தி.மு.க உறுப்பினர் ஒருவருக்கு ஏழு நிமிடங்கள் வாய்ப்பு தரப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அவரைப் பேசவிடாமல் அமைச்சர்கள் குறுக்கீடு செய்கிறார்கள். அவர்கள் ஏதோ பதில் சொல்கிறார்கள். அதிலேயே அரை மணி நேரம் ஆகிவிடுகிறது. இந்த அரை மணி நேரத்தையும் தி.மு.க உறுப்பினர் பேசியதாகப் பதிவுசெய்துவிடுவார்கள். உண்மையில், தி.மு.க உறுப்பினர் பேசியது நான்கு நிமிடங்களாக மட்டுமே இருக்கும்.

எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு, சபாநாயகர் போதிய வாய்ப்பு தருவது இல்லை. பெயர் அளவுக்கே வாய்ப்பு தருகிறார்... தந்தார். அதிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதில் பெரும்பகுதி அவைக்குறிப்பில் இடம்பெற முடியாத அளவுக்கு, இருட்டடிப்பு வேலை தொடர்ந்து நடைபெறுகிறது. ஆளும் கட்சியினர் எதைப் பேசினாலும், எப்படிப் பேசினாலும் அவைக்குறிப்பில் ஏறும். எதிர்க்கட்சியினர் எவ்வளவு அளந்து வரையறையோடு  பேசினாலும், அனைத்தும் அவைக்குறிப்பில் ஏறிவிடும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. பேசுவது அவைக்குறிப்பில் இடம்பெறுவதும், இடம்பெறாததும் சபாநாயகரின் மனநிலையைப் பொறுத்ததோ, பேரவை விதிகளைப் பொறுத்ததோ அல்ல. சபாநாயகர் பின்பற்றும் ஜனநாயகம், தனி  ரகத்தைச் சார்ந்தது. தமிழ்நாடு சட்டமன்றமே ‘டெங்கு’ காய்ச்சலால் அவதிப்படுவதைப் போன்றதொரு நெருக்கடி நிலையைக் கொண்டுவந்துவிட்டார்கள்”

‘‘சட்டமன்றத்தில் அமைச்சர்களின் செயல்பாடு எப்படி இருந்தது?”

‘‘பிரச்னைகளுக்கு ஏற்ப பதில் தந்தால் அல்லவா, திருப்தி அல்லது திருப்தி இல்லை எனக் கூற முடியும்? எந்தக் கேள்வி கேட்டாலும், அம்மாவைப் புகழ்கிறார்கள்; தி.மு.க-வை இகழ்கிறார்கள். இந்த இரண்டுதான் அவர்களுக்குத் தெரிகிறது. இந்த இரண்டு காரியங்களை ஒழுங்காகப் பார்ப்பவர்களை மட்டும்தான் அமைச்சர்களாக வைத்துள்ளார்கள்.

முதுகு வளையக் குனிபவர்கள், நெடுஞ்சாண்கிடையாக விழுபவர்கள், பொம்மைகளைப்போல புரள்பவர்கள், மண்சோறு சாப்பிடுபவர்கள்... இவர்களைத்தான் அமைச்சர்களாக வைத்திருக்கிறார்கள். இவர்களிடம் இருந்து எதை எதிர்பார்க்க முடியும்? இந்தத் திறமையில் யார் உசத்தி என்பதில் வேண்டுமானால் போட்டிகள் வைக்கலாம். எல்லா அமைச்சர்களுக்கும் ‘பல்’ இருக்கிறது; உருப்படியான ‘சொல்’தான் இல்லை!”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்