உணவு நல்லது வேண்டும்!

வெற்றிலை பானகம்

தேவையானவை: வெற்றிலை - 7, காய்ச்சிய பால் -      2 கப், சப்ஜா விதை - அரை டீஸ்பூன், ரோஸ் சிரப் - சிறிதளவு, குல்கந்து - 4 டீஸ்பூன், நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா - தலா 2, நறுக்கிய உலர்ந்த அத்திப்பழம் - 1.

செய்முறை: வெற்றிலையைக் கழுவி, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு அரைக்க வேண்டும். இதில், பால், குல்கந்து சேர்த்துக் கலக்கி, தண்ணீரில் ஊறவைத்த சப்ஜா விதையைச் சேர்த்து, ரோஸ் சிரப்பை ஊற்றி, நறுக்கிய பாதாம், பிஸ்தா உள்ளிட்டவற்றைச் சேர்த்துக் குளிரவைத்துப் பரிமாறலாம்.

பலன்கள்: வெற்றிலை, வாய் துர்நாற்றத்தைப் போக்கும்; பல் ஈறுகளில் உள்ள நீர் வறட்சியைத் தடுக்கும். சப்ஜா விதையில் அதிக அளவு இரும்புச்சத்து இருப்பதால், ரத்தசோகையைத் தடுக்கும்.

வாய்த்தொற்று இருப்பவர்கள் சாப்பிடலாம். நட்ஸ் வகைகளில் வைட்டமின்கள், தாதுஉப்புக்கள் நிறைவாக உள்ளன. குல்கந்து, உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்; செரிமானத்தை மேம்படுத்தும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்