10 செகண்ட் கதைகள்

ஓவியங்கள்: ஸ்யாம்

தேய்பிறை

தலை கவிழ்ந்தபடி டாஸ்மாக் முன்னர் விழுந்துகிடக்கும் தமிழனை ஓரமாகப் படுக்கவைத்த பிறகு, அவசரமாக வேலைக்குக் கிளம்பினான் பீகார் இளைஞன்!

- டி.என்.ராஜேஷ்

லைக்ஸ்

``நீங்க `பிடிக்கலை'னு சொன்ன புடைவைக்கு எத்தனை லைக்ஸ் கிடைச்சிருக்குனு பாருங்க'' என்று ஃபேஸ்புக் பக்கத்தை கணவனிடம் காண்பித்தாள் மனைவி திவ்யா!

- வெ.சென்னப்பன்

பிரார்த்தனை

``நான் நல்லபடியா குணமடைஞ்சா... பொங்கல் வெச்சு, கிடா பலிகொடுக்கிறேன்'' என வேண்டிக்கொண்டான் விபத்தில் உயிர் பிழைத்த திவாகர்!

- கோ.பகவான்

துரத்தி விளையாடு

``நான் உன்னைத் துரத்துவேனாம்... நீ ஓடிக்கிட்டே `யாராச்சும் என்னைக் காப்பாத்துங்களேன்...'னு கத்துவியாம்'' என்றான் சிறுவன் சிறுமியிடம்!

- கோ.பகவான்

வீர விளையாட்டு

``ஜல்லிக்கட்டை இனி யார் வேண்டுமானாலும் விளையாடலாம். அதற்குத் தடையே இல்லை''

- ஆச்சர்யமாகச் சொன்னார் அந்த கம்பெனி டைரக்டர். ``அடுத்து நாம் தயாரிக்கப்போகும் வீடியோ கேம், ஜல்லிக்கட்டு!''

- க.மோ.செல்வா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்