ஜென் Z - அசத்தும் ஆன்லைன் தியேட்டர்!

சிபி

1. புதுப்படம் வெளியானால் அதைத் திருட்டுத்தனமாக இணையத்தில் தரவிறக்கம் செய்து, திருட்டு டி.வி.டி-யில் பார்ப்பதைத் தடுக்க வேண்டும்.

2. `காசு கூட வாங்கிக்கோங்க. ஆனால், நான் தியேட்டருக்கு எல்லாம் வர மாட்டேன்ஜி. எப்பேர்ப்பட்ட படமாக இருந்தாலும், அதை கணினியில், டி.வி-யில் டி.வி.டி-யில் அல்லது செல்போனில்தான் பார்ப்பேன்’ என்று அடம்பிடிப்பவர்களுக்கும் படம் காட்ட வேண்டும்.

3. `நான் வெளிநாட்டில் இருக்கேன். இங்கே நான் விரும்பும் என் மொழி படங்கள் வெளியாவது இல்லை. டாரன்டுகளைவிட்டால் வேறு என்ன வழி?’ எனக் கதறும் என்.ஆர்.ஐ-களையும் சமாளிக்க வேண்டும்.

இந்த மூன்று வகை பிரச்னைகளையும் சமாளிக்க, இரண்டு கேரள இளைஞர்கள் கண்டுபிடித்திருக்கும் புதிய பாதைதான் `ரீல்மாங்க்'.

கொச்சினைச் சேர்ந்த விவேக்கும் பிளெய்ஸி எம்.கிரவ்ளியும் நெருங்கிய நண்பர்கள். வார இறுதி வந்துவிட்டால் படங்கள் பார்ப்பதுதான் இவர்களின் பொழுதுபோக்கு. கல்லூரிக் காலம் முடிந்த பிறகு, விவேக் வேலைக்காக மும்பை சென்றுவிட்டார். ஆனால், அங்கே அவருக்கு ஒரு சிக்கல். ‘மும்பையில் மலையாளப் படங்களே ரிலீஸ் ஆக மாட்டேங்குது. படம் பார்க்காம ரொம்ப கஷ்டமா இருக்கு. உலகம் முழுவதும் உள்ள மல்லுவுட் ரசிகர்களும் இப்படித்தான சிரமப்படுவாங்க?’ என கிரவ்ளியிடம் பேச, நண்பனின் சோகத்தைப் போக்க  முடிவெடுத்தார் கிரவ்ளி. அப்படித்தான் உதித்திருக்கிறது `ரீல்மாங்க்’ ஐடியா.

கிரவ்ளி, டெக்னாலஜி கில்லி. அவரே இந்த ரீல்மாங்க் சாஃப்ட்வேரை டெவலப் செய்தார். விவேக், நிதி திரட்டும் முயற்சியில் இறங்கினார். தொடங்கும்போதே பிரமாண்டமாக, மிக பிரமாண்டமாகனு மார்க்கெட்டிங் செய்து 10,000 பேரை `ரீல்மாங்க்’-ல் மெம்பர் ஆக்கினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்