ஜென் Z - குஸ்கா நிச்சயம்

ஜே, படம்: மீ.நிவேதன்

`நாம ஒண்ணு நினைச்சா... தெய்வம் ஒண்ணு நினைக்கும்’கிறது பழமொழி. அதை அவாய்ட் பண்ணணும்னா, நாம ரெண்டா நினைச்சுடணும் ப்ரோ. ஒண்ணு RAC டிக்கெட். ஆனாலும் இன்னொண்ணு கன்ஃபர்ம் ஆகிடும்கிற ஐதீகம்தான். அப்படி நீங்க எதையெல்லாம் நினைப்பீங்க?'னு பையன், பொண்ணு வித்தியாசம் பார்க்காம சில பேர்கிட்ட கேட்டோம்...

ஷாப்பிங் போனால்

பர்ச்சேஸ் லட்சியம்,
செல்ஃபிக்கள் நிச்சயம்.

புரொஃபைல் பிக்சர்

100 லைக் லட்சியம்,
10 ஹா ஹா எமோஷன் நிச்சயம்.

கேர்ள் ஃப்ரெண்டிடம் 

ரிப்ளை லட்சியம்,
புளூ டிக் நிச்சயம்.

லீவுக்கு ஊருக்குப் போனால்...

கறிக்குழம்பு லட்சியம், பருப்பு சாம்பார் நிச்சயம்.

 வீக் எண்ட் லீவு

 சனிக்கிழமை லட்சியம்,
 ஞாயிற்றுக்கிழமை நிச்சயம்!

காலையில் எழுந்திருப்பது

6 மணி லட்சியம், 10 மணி நிச்சயம்.

எக்ஸாம்

ஆல் க்ளியர் லட்சியம்,
அரியர் நிச்சயம்.

ஃப்ரெண்ட்ஸுடன்

கோவா டூர் லட்சியம்,
கோவளம் நிச்சயம்.

மழை பெய்தால்

ரசிப்பது லட்சியம், மழை ஸ்டேட்டஸ் நிச்சயம்.

தியேட்டரில்

செம படம் லட்சியம்,
முட்டை பஃப்ஸ் நிச்சயம்.

ஏ.டி.எம்-மில்

அமெளன்ட் லட்சியம்,
ஏசி காத்து நிச்சயம்.

தமிழ் சினிமாவில்

சிம்பு படம் லட்சியம்,
தனுஷ் படம் நிச்சயம்.

மொபைல் நெட்

4ஜி ஸ்பீடு லட்சியம்,
2ஜி ஸ்பீடு நிச்சயம்.

ட்ரீட்

பீட்சா லட்சியம்,
குஸ்கா நிச்சயம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்