ஜென் Z - நான் நிவாஸ் கே.பிரசன்னா ஆனது எப்படி?

சிபி

``சின்ன வயசுலேயே ஒரு இலக்கு வைத்து, அதை நோக்கி நேர்மையாகப் பயணம் செய்ததால் என்னவோ, பெரிய தடங்கல்களை, தோல்விகளை இதுவரை நான் சந்திக்கலை. நமக்கான நேரம் வரும்னு தொடர்ந்து உழைச்சுட்டே இருந்தேன். இந்த உழைப்பு, என்னை வெற்றியை நோக்கி நகர்த்தும்னு நம்புறேன்''

- அடக்கமாகப் பேசுகிறார் இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா. `தெகிடி', `சேதுபதி' படங்கள் மூலம் கவனம் ஈர்த்த தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர்.

``மதுரையில் பிறந்து திருநெல்வேலியில் வளர்ந்தவன் நான். எங்க அப்பா, வீட்டுல எப்பவும் பாட்டு பாடிட்டே இருப்பார். ரேடியோ, டேப் ரிக்கார்டர்னு ஏதோ ஒண்ணு பாடிக்கிட்டே இருக்கும். ஒருநாள் வடிவேலு மாதிரி `இந்த இசை எங்கு இருந்து வருது?'னு எங்க அப்பாகிட்ட கேட்டிருக்கேன். அவர் `இந்த இசையை உருவாக்குவது இசையமைப்பாளர். அவர்தான் இதுக்கு எல்லாம் க்ரியேட்டர்'னு சொல்ல, உடனே `நானும் இதுபோல இசையை உருவாக்கணும்'னு சொல்லியிருக்கேன். நான் அப்ப விளையாட்டுக்குக்கூட சொல்லியிருக்கலாம். ஆனா, அதை அப்பா ரொம்பக் கவனமா எடுத்துக்கிட்டு ஒண்ணாம் வகுப்பு படிக்கும்போதே பியானோ க்ளாஸ் சேர்த்துவிட்டார். அங்கு இருந்து ஆரம்பிச்சதுதான் என் இசைப் பயணம்.

ஸ்கூல் கல்ச்சுரல்ஸ் வந்தால், நான்தான் ஹீரோ. பியானோ வாசிச்சுக் கலக்குவேன்; நல்லா பாட்டும் பாடுவேன். புதுப்புது ட்யூன்கள் நிறையப் பிடிச்சு, கம்போஸ் பண்ணுவேன். நல்லா வந்தால் பிறருக்கும் போட்டுக் காண்பிப்பேன்... பாராட்டுவாங்க. இந்தச் சின்னச் சின்னப் பாராட்டுக்களால் பள்ளியில் பேனாவைப் பிடித்த நேரத்தைவிட, பியானோவைப் பிடித்த நேரம்தான் அதிகம். இதை அம்மா புரிஞ்சுக்கிட்டாங்க. ஸ்கூல் முடிச்சேன். அடுத்தகட்ட வளர்ச்சிக்கு சென்னைதான் சரியா இருக்கும்னு, ஒட்டுமொத்தக் குடும்பமும் எனக்காக சென்னை வந்துட்டாங்க.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்