ஜென் Z - “அஷ்வின் ஒரு கிராமமாமே!”

கே, படங்கள்: பெ.கெசன்ட்ரா இவாஞ்சலின் , ஓவியம்: ஜி.ராமமூர்த்தி

கிரவுண்டுக்குள் வரும்போது பேட்டுடன் உற்சாகத்தையும் கொண்டுவருபவர் கிரிக்கெட் கில்லி கிறிஸ் கெயில். கிரிக்கெட் பார்க்கும் எல்லா நாடுகளிலும் ரசிகர் படை வைத்திருக்கும் அகில உலக செல்லப்பிள்ளை சென்னைக்கு வந்திருக்கிறார் என்றால், சும்மா விட முடியுமா?

“உங்க சிக்ஸர் அளவுக்கு எல்லாம் நீநீநீநீநீளமான பேட்டி இல்லை பாஸ், இது டி-ட்வென்டி பேட்டிதான்” என்றதும், கேள்விப் பந்துகளை எதிர்கொள்ளத் தயாரானார்.

``வெஸ்ட் இண்டீஸ் டீம் ஆண்கள், பெண்கள்னு ரெண்டுலயும் கலக்குதே என்ன ரகசியம்?''

``கிட்டவாங்க சொல்றேன்... ஆண்கள் அணியைப் பொறுத்தவரை அதில் கிறிஸ் கெயில்னு ஒரு பையன் இருக்கான். அவன் எல்லாத்தையும் பார்த்துப்பான். (சிரிக்கிறார்). பெண்கள் அணியிலயும் அப்படி சிலர் இருக்காங்க. கிரிக்கெட், எங்க நாட்டுக்கு இயற்கையிலே நெருக்கமான ஒரு விளையாட்டு. குறிப்பா, டி20 எங்க குணத்துக்கு ரொம்பவே செட் ஆகுது. அதனால இருக்கலாம்.''

``வெஸ்ட் இண்டீஸ், டி20-யில உலக சாம்பியன். ஆனால், டெஸ்ட் போட்டிகளில் சொதப்புறாங்களே?''

``வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில் நிறையக் குழப்பங்கள் இருக்கு; பல சமயம் வீழ்ந்து எழுந்திருக்கு. இப்பவும் அப்படி ஒரு தருணம்தான். ஷார்ட் ஃபார்மட்ல அந்த மாற்றம் நடந்தது. டெஸ்ட் போட்டிகளிலும் அது தெரிய கொஞ்சம் நாட்கள் ஆகும். நிறைய இளம் வீரர்கள் வந்து நல்லா விளையாட ஆரம்பிச்சிருக்காங்க. அவங்க எக்ஸ்பீரியன்ஸ் ஆகி, டெஸ்ட்டிலும் கலக்குவாங்க... கொஞ்சம் வெயிட்பண்ணுங்க.''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்