ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 7

டாக்டர். ஆர்.கார்த்திகேயன், ஓவியம்: காமேடி

 #உடல்மொழி

நமக்கு பென்ச்மார்க்ஸ் தொலைவில் இருப்பது இல்லை. உடன் பிறந்தவர்கள், உடன் படிப்பவர்கள், உடன் பணிபுரிபவர்கள் மற்றும் உற்றத் தோழர்கள் இவர்களின் உயரத்தைவைத்துதான், நாம் நம்மை அளந்துகொள்கிறோம். வாழ்வின் பல முக்கிய முடிவுகளை எடுப்பது இவர்களைப் பார்த்துதான்.

இதெல்லாம் சிறுவயதில், பெற்றோர் ஆரம்பித்து வைத்ததுதான். `அவன் பண்றான்... உன்னால் முடியாதா?’ பிறகு, முடியாத காலத்தில் பெற்றோர் ஜகா வாங்குவார்கள். `அவன் பண்றது எல்லாம் நம்மால் முடியுமா?’. ஆனால், ஒப்பீடுசெய்வது என்பது நமக்கு நன்கு பதிவாகிவிட்டது.

காரணம், நாம் கற்றவை எல்லாம் பிறர் சொல்வதைக் கேட்டு அல்ல; பிறரைப் பார்த்து. இதை `vicarious learning' என்பார்கள். அப்பா சவரம்செய்யும் பாவனை, ஆசிரியரின் அதே வார்த்தைகள், பாஸின் உடல்மொழி என எல்லாவற்றையும் பார்த்து காப்பி அடித்துதான் உலகத்தைக் கற்கிறோம்.

`எங்கள் கேங்கில் எனக்கு மட்டும் கேர்ள்ஃப்ரெண்ட் இல்லை’ என்பதில் ஆரம்பித்து, எல்லா விஷயங் களிலும் தன் தோழமைகள்தான் நம் ரெஃபரன்ஸ் பாயின்ட். முடி திருத்துதல், டாட்டூ, டேட்டிங், செக்ஸ், வேலைத் தேர்வு, வெளிநாடு வாழ் ஆசை, கார், வீடு, ஹனிமூன் சாய்ஸ், குழந்தை, முதலீடு மற்றும் பெற்றோரைப் பராமரித்தல் வரை பலவற்றை முடிவுசெய்வது, நம் பியர் குரூப்தான்.
`என் பையனுக்கு ஃப்ரெண்ட்ஸே கிடையாது. எல்லாம் நாங்கதான். லவ் புரப்போஸ் பண்ணக்கூட எங்ககிட்டதான் ஐடியா கேட்பான். என் தங்கை பையன், இவனுக்கு நேர் எதிர். இவன் மட்டும் ஏன் இப்படி இருக்கான்?’ என்று கேட்ட அம்மாவுக்கு என்ன பிரச்னை?

`பியர் குரூப் பிரஷர்’தான்!

 #நண்பர்கள்

உயர்கல்வி ஆலோசனையில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஆலோசகர்கள் என அனைவரையும்விட மிகவும் சக்திமிக்கவர்கள் நண்பர்கள்தான்.

`EEE-க்குதான்பா செம ஃப்யூச்சர். வினோத்தே சொல்லிட்டான்!”

வினோத் அரியர்ஸ் முடித்து EEE-க்கு கூடவருவானா என்றால், சந்தேகம்தான்!

`பி.காம் கிடைக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன். வரலாறு எல்லாம் படிக்க முடியாது’ என்று 80-களில் அடம்பிடித்த நண்பனின் தங்கை, இன்று அசாமில் டீம் டூரிஸம் செய்து ஜமாய்க்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்