ஜென் Z - கிறுக்கலாம்... ரசிக்கலாம்!

பு.விவேக் ஆனந்த்

மினிமலிசம், எமோட்டிக்கான்ஸ் போல ட்ரெண்டிங் மேட்டர்தான் டூடுல். அதென்ன டூடுல்?

க்ளாஸ் ரூமில் போரடித்தால் டீச்சரையோ அல்லது நண்பர்களையோ நோட்புக் கடைசிப் பக்கத்தில் கேலியாக வரைந்து காமெடி செய்வோம் இல்லையா! அதன் மாடர்ன் வெர்ஷன்தான் டூடுல்.

பிடித்ததுபோல எப்படியும், ஜாலியாக வரையலாம், வரைமுறை எதுவும் கிடையாது என்பது டூடுலின் சிறப்பு.

டூடுல் ஆர்ட்டில் நம்ம ஊர் கில்லி ஸ்ரீராம சந்தோஷ். `கள்ளப்படம்' படத்தின் நடிகர், ஒளிப்பதிவாளர்.

``சின்ன வயசுல இருந்து வாழ்க்கையில் நிகழும் விஷயங்களை டைரியில் பதிவுபண்ணும் பழக்கம் உண்டு. ஆனால், நான் டைரியில் எழுத மாட்டேன். எல்லாத்தையும் சுருக்கமா டூடுல் ஆர்ட் பண்ணிடுவேன். சாலையோரத்தில் வயசானவங்க ரெண்டு பேர் ஒரு டீயும் பன்னும் வாங்கி அதை ரெண்டாப் பிரிச்சு சாப்பிட்டுட்டு இருந்தாங்க. மனசைப் பிசையும் காட்சி அது. அந்த விஷயத்தை ஒரு பத்திரிகையாளர் பார்த்திருந்தா, எமோஷனலா எழுதியிருப்பார். போட்டோகிராஃபர் பார்த்திருந்தா அதைப் படம் பிடிச்சிருப்பார், நான் டூடுல் பண்ணினேன். டூடுலின் ஸ்பெஷலே எந்த ஒரு விஷயத்தையும் சுருக்கமா, அதே சமயம் அந்த விஷயம் சம்பந்தப்பட்ட எமோஷனலை பார்வையாளர்களுக்குக் கடத்த முடியும் என்பதுதான். அப்பப்ப ஜாலியான டூடுல் ஆர்ட் பண்ணி ஃபேஸ்புக், ட்விட்டர்ல ஷேர் பண்ணிட்டு இருந்தேன். செம ரெஸ்பான்ஸ்!

அதுக்கு அப்புறமா என்னோட டூடுல் ஆர்ட்டை கண்காட்சிக்குக் கொண்டுபோனேன். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் ரோவன் யுனிவர்சிட்டியில் ஸ்பெஷல் ஆர்ட் கண்காட்சி நடந்தது. எங்க டீம் எடுத்துட்டுப் போன அத்தனை டூடுல் ஆர்ட்டும் அங்கே போனியானது. அங்கே கிடைத்த பாராட்டுக்கள்தான் டூடுல் மாங்க்னு (doodlemonk) ஒரு வெப்சைட் ஆரம்பிக்க உந்துதலா இருந்தது.

பொதுவா, ஒரு டூடுல் ஆர்ட்டை கான்செப்ட் பிடிச்சு 20 செகண்ட்லயும் பண்ணிடலாம்; சிலவற்றுக்கு இருபது நாட்கள்கூட தேவைப்படலாம். இதை நான் தொழிலுக்காக ஆரம்பிக்கலை. அதனால் என் வாழ்க்கையில் எப்பவும் நான் கிறுக்கிட்டுதான் இருப்பேன். ஆமாம்... நான் டூடுல் கிறுக்கன்” என்கிறார் சந்தோஷ்.

நல்லா கிறுக்குங்க... நல்லதையே கிறுக்குங்க!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்