இந்த அன்புக்குத்தானா?

கவிதை: ச.முத்துவேல், ஓவியம்: செந்தில்

ந்த அன்புதான்... இந்த அன்புதான்
வேண்டாம்... வேண்டவே வேண்டாம்.
உன் காலில் விழுந்து மன்றாடுகிறேன்
இந்த அன்பிலிருந்து நம் எல்லோருக்கும்
விடுதலை அளித்துவிடு.

உன்னுடைய இந்த அன்புதான், இந்த அன்புதான்...
என்னைக் குடிகாரனாக்கியது;
என் எலும்புகளை உடைத்தது;
என் குரூரங்களை எடுத்து எடுத்துக் காட்டி
நானே என்னைக் கண்டு அஞ்சவைத்தது;
என் பிள்ளைகளை என்னிடமிருந்து பிரித்தது;
ஊரையே எனக்கெதிராக ஏவிவிட்டது;
ஊரடங்கு உத்தரவை ஆணையிட்டது;
என் மீது அவதூறுகளைப் பரப்பியது.

உன்னுடைய இந்த அன்புதான்,
என்னை அம்மணமாக்கி ஊர்வலம் நடத்தியது;
தனிமையில் ரகசியமாய் அழவைத்தது;
என்னை தீண்டத்தகாதவனாக்கியது;
என்னை தலைமறைவாய்த் துறவு போகவைத்தது.

உன்னுடைய இந்த அன்புதான்
தற்கொலைகளுக்குத் தூண்டியது.
உன்னுடைய இந்த அன்புதான்
சிறைகளுக்குள் தள்ளியது.
உன்னுடைய இந்த அன்புதான்
என்னைக் கொலைகாரனாக்கியது.
உன்னுடைய இந்த அன்புதான்
என்னைக் கொலைசெய்தது.
உன்னுடைய இந்த அன்புதான்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்