டெல்டா நிலம்!

கவிதை: அ.நிலாதரன், படம்: சி.சுரேஷ் பாபு

ருப்பை சினைமுட்டையென
தண்ணீர் தொடுதலுக்காய்
விதை மணிகளைச்
சுமந்துகிடக்கும் நிலம்
நினைவில் உறைந்திருக்கிறது.
உழவு மாடுகளின் ஓயாத நடையும்
கோவண மனிதர்களும்
அதன் நினைவுகளில் சுற்றிச் சுற்றி வருகிறார்கள்.
பட்டம் போடும் படிக்காத பெண்களின்
விரல்களின் நர்த்தனத்தில்
சொக்கிக்கிடக்ககிறது சேறு.
நினைவின் தொலைவில் எங்கோ கேட்கிறது
தன் துக்கவாழ்வைச் சொல்லும்
நடவுப்பெண்ணின் துயரப் பாடலொன்று.
இளந்தாரிகளின் காதல் மொழியும்
சம்சாரிகளின் சரசப் பேச்சும்
நாற்று முடிகளைப்போல் இடையிடையே
வந்து விழுகின்றன.
கொக்குகளும் மைனாக்களும்
இன்னும் ஏதேதோ பட்சிகளும்
தாழ்ந்தும் உயர்ந்தும் பறந்தவண்ணம் இருக்கின்றன.
காதல் உணர்வைக் கிளர்த்தியபடி
காற்றில் கலந்து வீசுகிறது பயிர்வாசம்.
நிஜத்தின் வெம்மை தாளாது
நினைவு மீள்கிறது நிலம்
கானலோடுகிறது அதன் மீது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்