என்னென்று தெரியவில்லை...

கவிதை: பழநிபாரதி, படம்: பா.ஜான்ஸன்

வ்வோர் அதிகாலையிலும்
வாசலில்
வெண்கல வட்டிலில் நீர் நிறைத்து
வெவ்வேறு பூக்களை
மிதக்கவிடும் அவள்
இன்று
தேன்கூட்டுப் பூக்களை
மிதக்கவிட்டிருந்தாள்

காதலான கசிந்துருகலோ
பிரிவாற்றாமைத் தனிமையோ
குற்ற உணர்ச்சியோ
என்னென்று தெரியவில்லை            
புதிதாக
பூக்களோடு சேர்த்து
அதன் இலைகளையும்
மிதக்கவிட்டிருந்தாள்

பூக்களைவிட இலைகள்
எவ்வளவு அழகாக மிதக்கின்றன
பாருங்கள் என்றாள்

பூக்களைவிடவும்
இலைகளைவிடவும் 
அழகாக மிதக்கும்       
அதன் வேர்களை
அவள் கண்களில் கவனித்தேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்